Showing posts with label ஓரவஞ்சனை. Show all posts
Showing posts with label ஓரவஞ்சனை. Show all posts

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, "தான், தன் சுகம்" என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் "விசிட்டர்" என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த "விசிட்டுகள்" கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து "எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்" என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு "ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்" என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்" என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி

புதுடில்லி: செப்டம்பர் 20,2009

"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.

குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154

மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?

ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.

இது செய்தி.

சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?

ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!

இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!

பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!

தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!

ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!

பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!

மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!

மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி

புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.

எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.

மிஸ்டு காலுக்கு மயங்காதே!

ஆண்டிப்பட்டி,ஆக.28- 2008. தினத்தந்தி

செல்போனில் `மிஸ்டு கால்' கொடுத்து அழைத்ததால் ஏற்பட்ட காதலில் சிக்கிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மிஸ்டுகால் காதல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் அறிவழகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடிக்கடி செல் போனில் `மிஸ்டு கால்' வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் அறிவழகன் பேசத்தொடங்கினார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை தொடர்ந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசினார்கள்.

தொடர்ந்து `மிஸ்டு கால்' மூலம் பேசியதில் அந்த பெண்ணுக்கும் அறிவழகனுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது தான் அந்த பெண் வேலூர் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள அப்துல்லா புரத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் உஷா(16) என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் சென்னையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் காதலனை சந்திக்க சென்னைக்கு சென்ற உஷாவை வாலிபர் அறிவழகன் தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கடத்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாததால் தேடிய தனபால் மகள் ஆண்டிப் பட்டியில் இருப் பதை அறிந்து இங்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் டி.சுப்புலாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அறிவழகனையும், உஷாவையும் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இளம் பெண் உஷாவை மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அவரை அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தி இருக்கிறார்.