Showing posts with label சுதா ராமலிங்கம். Show all posts
Showing posts with label சுதா ராமலிங்கம். Show all posts

மாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்

தர்மபுரி அருகே பயங்கரம்:
82 வயது மாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்
குடும்ப தகராறில் வெறிச்செயல்

தர்மபுரி, அக்.8- 2009

தர்மபுரி அருகே குடும்ப தகராறில் 82 வயது மாமியாரை பிளேடால் கழுத்தை அறுத்து மருமகள் கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகளை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாமியார்- மருமகள் சண்டை

தர்மபுரி மாவட்டம் அதிய மான்கோட்டை அருகே உள்ள முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகம்மாள் (வயது82). காளிப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகம்மாள் மகன் சின்ராஜ் வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி ஆண்டாள் (61). ஓய்வு பெற்ற மண் பரிசோதனை நிலைய அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு உமாராணி என்ற மகளும், சதானந்தம் என்ற மகனும் உள்ளனர். இவர் சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள ஒரு பள்ளியில் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

சின்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்தார். மகனும், மகளும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாமியார் நாகம்மாளும், மருமகள் ஆண்டாளும் ஓரே வீட்டில் தங்கி வந்துள்னர். அவர்களுக்குள் மாமியார், மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மருமகள் கைது

இந்தநிலையில் மாமியார் நாகம்மாளுக்கும், மருமகள் ஆண்டாளுக்கும் நேற்று முன் தினம் இரவு பிரச்சினை ஏற் பட்டுள்ளது. இதில் ஒருவரை, ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆண்டாள் பிளேடால் நாகம்மாளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் ஆண்டாளை கைது செய்தனர். 82 வயதில் மாமியார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

======================= ================



மணமான பெண்களை வன்முறையில் ஈடுபடும்படி ஊக்குவிக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் இந்தச் செய்தியைப் படித்து பரவசமடைவார் என்று நம்புகிறோம்!

அவர் “அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு” என்று குறிப்பிட்டிருக்கும் ”குடும்ப வன்முறை சட்டம்” திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்வது என்னவென்றால் “குடும்ப வன்முறை என்பது கணவன் மட்டும் தான் செய்வான். வன்முறையில் பாதிக்கப்படுவது மனைவி மட்டுமே” என்பதுதான். அதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி மனைவி புகார் கொடுத்தால் மாமியாரை அவருடைய வீட்டிலிருந்தே வெளியேற்றி நடுத்தெருவில் நிற்க வைக்கலாம். ஏனெனில் சட்டத்தின் பார்வையில் மற்றும் நீதிபதிகளின் நோக்கில் மாமியார் மற்றும் நாத்தனார்கள் பெண்ணினமே இல்லை. மனைவி மட்டுமே பெண். அவளுக்குத்தான் அத்தனை உரிமையும்.

இதுபோல் ஏன் சட்டம் இயற்றுகிறார்கள்? அதன் பின்னணி என்ன? நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பெண்கள் கல்வி, பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறையிலும் இன்று பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளதையும், தற்கால ஆண்கள் வரதட்சணை போன்ற பழைய நடைமுறைகளிலிருந்து முழுதும் வெளி வந்துள்ள நிலையையும் அறவே மறைத்து, இன்னமும் வரதட்சணைக் கொடுமை நடப்பதாக தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து கொண்டு, பொய் வழக்குகள் போட்டு குடும்பங்களைச் சிதைப்பதற்காகவே இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை இயற்றவைக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள் யார் யார்? Is it to serve certain vested interests?

பதில் கிடைக்கும் நாள் சீக்கிறமே வரும். இப்போதுதானே மாஜிஸ்டிரேட், எஸ்.பி வரையில் சட்டம் பாய்ந்திருக்கிறது! இன்னமும் உச்ச நீதிமன்ற நிதிபதிகள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி என்னும் அளவில் வரதட்சணை பொய் வழக்குகள் பொங்கிப் பரவி பஸ்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கைவைக்கத் தலைப்படும் நிலை வரும்போது அனைவரும் கண் விழிப்பார்கள். அது வரை அப்பாவி கணவன்மார்களும் அவர்கள்தம் வயோதிக பெற்றோர்களும் இளம் உடன் பிறப்புக்களும் பொய் கேசில் சிக்கி ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்!

சமீபத்தில் திருமதி. சுதா ராமலிங்கம் என்னும் வக்கீல் ஒரு டிவி பேட்டியில் கூறியிருக்கிறாரே, கைதாகி 15 நாட்கள் ஜெயிலில் இருந்து விட்டு வந்தால் என்ன குறைந்தா போய் விடப் போகிறது; அதைப்போய் பெரிசு பண்ணுகிறீர்களே என்று! அவரும் இத்தகைய சட்டங்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் நிற்கும் இயக்கங்களைச் சேர்ந்தவர்தான்.

வளரட்டும் பொய்க் கேசுகள்! சீக்கிறமே ஒரு தீர்வு கிடைக்கும்!