Showing posts with label lust. Show all posts
Showing posts with label lust. Show all posts

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

எ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்!

வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!

லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்.

எழுமலை, நவ.27 - 2009. செய்தி - தினத்தந்தி

உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் (கள்ளக்)காதலி (!) மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மில்லில் காதல்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.

செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர். (அதுபோல் பேசலாமா? என்னடா உலகம் இது!)

விஷம் குடித்தனர்

இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=529873&disdate=11/27/2009&advt=2

சீரழிவை நோக்கி ஒரு பயணம்

நம் நாட்டுப் பெண்களை தாங்கள் பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள்.

இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு ஆண்மகனிடம் அனுபவிக்கும் செக்ஸில் மட்டும் திருப்தி அடையாமல் பலவகை சுகத்தைத்தேடி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நிக்ழ்வுகள் அதிகமாகும்போதுதான் பெண்ணியவாதிகளின் அடிப்படை நோக்கமாகிய நம் குடும்ப வாழ்வு முறைச் சிதைவு முழுதாக நிறைவேறும்.
ஆனால் அந்தப் பெண்கள் கதி?

இந்தச் செய்தியைக் கூர்ந்து நோக்குங்கள்:-

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நவம்பர் 23,2009. செய்தி - தினமலர்

கடலூர் : கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் மொபைல் போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணி இருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கிய மேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பின், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என மாலதி கூறினார்.

ஆத்திரமடைந்த நான், 2008 ஆக., 13ம் தேதி மாலதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் புதுக்கோட்டை சென்று டெய்ஸி ராணியின் கழுத்தில் கத்தியால் வெட்டினேன். அதில், டெய்ஸி ராணி பிழைத்துக் கொண்டார்.

பின்,கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்துமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் காதலித்தேன். அவர் என்னை காதலிக்கவில்லை. தொடர்ந்து அவரின் மனதை மாற்ற போனில் பேசிவந்தேன். கடந்த 14ம் தேதி, புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்த நான், இந்துமதியிடம் பேசி, தோட்டத் திற்கு வரவழைத்து, கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடலூர் முதுநகர் போலீசார், அந்தோணி இருதயராஜை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்

திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:

சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).

வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).

இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).

பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூன்று பெண் குழந்தைகளின் தாய் கள்ளக்காதலுக்கு பலி!

பெரும்பாலான 498A பொய் வழக்குகளுக்கு பெண்களின் கள்ளக்காதலே அடிப்படைக் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் சில பெண்ணியவாத அமைப்புகளும், மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பெண்களின் பாலியல் தேவைகளைப் பற்றியும், ஆண்களின் ஆண்மை விறைப்புத் தன்மையைப் பற்றியும் பேட்டி கொடுத்துக் கொண்டு இத்தகைய கள்ளக்காதல்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் தெய்வீகத்தனமையையும் ஊட்ட முயற்சித்து வருகிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஆனால் அத்தகைய கள்ள உறவுகளால் விளையும் தீங்குகளைப் பற்றி இவர்கள் எவருக்கும் அக்கறையில்லை. கள்ளக்காதல் புரியும் பெண்களின் குழந்தைகளின் நிலை என்ன? அது போல் கள்ளக்காதல் கிளிகள் பெற்ற குழந்தைகள் தனக்குப் பிறந்தவைதானா என்ற ஐயப்பாட்டை மறக்க இயலாமல் புழுங்கிச் சாகும் கட்டிய கணவன் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் குழந்தைகள் வளரப்போகும் சூழல்,அவர்களின் உளநிலை இவற்றைப் பற்றி கவலைப் படுவோர் எவர்?

எப்படியாவது நம் பாரம்பரிய குடும்பக் கட்டமைப்பை முழுமையாக சிதைத்து, அனைவரையும் தனி நபர்களாக ஆக்கி, கட்டுப்பாடற்ற செக்ஸ் கொள்ள வைத்து, சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் கல்லாவை உப்பிவிக்கும் நோக்கத்தில் செயல்படும் ஒரு பயங்கரமான போக்குதான் தற்போது நிலவுகிறது.

ஆனால் இந்தக் கள்ளக்காதல் கதைகள் பல கொலைகளில் முடிவதைக் காண்கிறோம். பெரும்பாலும் அந்த அப்பாவி கணவன், இல்லையேல் கள்ளக்காதலன், சில நேரங்களீல் கள்ளக்காதல் செய்யும் "அபலை" - இப்படி பல நிகழ்வுகள்.

அத்தகைய ஒரு கொலைச் செய்தியைத்தான் இப்போது காணப் போகிறோம். (ஓரிரு நாட்களாக கள்ளக்காதல் செய்திகளுக்கு லீவு விட்டிருந்தார்கள். இப்போது தொடங்கி விட்டனர் புதுக் கணக்கை!)


கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை காட்டிகொடுத்த மொபைல்போன்
நவம்பர் 18,2009 - தினமலர் (சுட்டி)

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இவர் நீண்டநேரம் மொபைல்போன் பேசியதை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோடுபுதுகண்மாய் அருகே கடந்த மாதம் ஒரு பெண் அரை குறையாக எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதை அறிந்து,விருதுநகர் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி,போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, காணாமல் போன தன் மனைவி நாகரத்தினம் பற்றிய விவரங்களை கூறினார். போலீசார் விவரங்களை கூறியவுடன் தன் மனைவிபோல் இருக்கிறது என்றார். பின்னர், போலீசார் அவரை விசாரிக்கையில், நாகரத்தினம் மொபைல் போன் மற்றும் நகைகள் அணிந்து சென்றதை கூறினார். போலீசார் அந்த மொபைல்போன் எண்ணை வாங்கி சம்பந்தப்பட்ட மொபைல்போன் அலுவலகத்தில் விசாரணை செய்கையில் குறிப்பிட்ட எண்ணில் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணை வைத்து முகவரியை விசாரித்த போது, அது விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தியின் எண் என தெரிய வந்தது. போலீசார் கணேசமூர்த்தியை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலராக வேலை செய்துவந்தார். அதே மில்லில் வேலை பார்த்து வந்த நாகரத்தினத்துடன் ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி இருவரும் டூ வீலரில் அருப்புக்கோட்டையில் சினிமா பார்த்து விட்டு, பின் விருதுநகர் ரோட்டிலுள்ள புதுகண்மாய் அருகே பேசி கொண்டிருந்தனர். நாகரத்தினம் கணேசமூர்த்தியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரடைந்த கணேசமூர்த்தி, தான் வைத்திருந்த துண்டால் நாகரத்தினத்தின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் கழுத்திலிருந்த ஆறு சவரன் நகை மற்றும் மொபைல்போனை எடுத்து கொண்டு, தன் டூ வீலரில் வைத்திருந்த பெட்ரோலை நாகரத்தினத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர். இறந்த நாகரத்தினத்திற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசமூர்த்திக்கு திருமணமாகி, அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடியாப்பச் சிக்கல்

ராஜபாளையம், அக்.23- 2009

ராஜபாளையம் அருகே முகவூர் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாடசாமி (வயது22). இவரும் சங்கரன் கோவில் தாலுகா பந்தல்குடி கிராமத்தை சேர்ந்த கடல்கனியும்(20) காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடல்கனிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆனாலும் கடல்கனிக்கும், மாடசாமிக்கும் இடையே தொடர்பு இருந்தது.

பின்னர் சில ஆண்டுகளில் கடல்கனி தனது கணவரை பிரிந்து விட்டார். இதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாடசாமியை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கடல்கனி கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. மாடசாமியும், கடல்கனியும் தனிக்குடித் தனமாக வசித்து வந்தனர். இந்தநிலையில் கடல்கனிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என மாடசாமி கருதினார்.

இதனால் கடல்கனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரிந்துவிட முடிவு செய்தார். ஆனால் கடல்கனி மாடசாமிக்கு தான் குழந்தை பிறந்தது என கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாடசாமி முகவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இந்த திருமணம் அவருக்கு நேற்று நடப்பதாக இருந்தது. இதையறிந்த கடல்கனி முகவூருக்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். பின்னர் கணவர் மாடசாமி 2-வது திருமணம் செய்தால் கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கடல்கனியை தளவாய்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு

இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.

இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.

உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேறும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!

இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!

சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். மேலும் அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!

அதன் சுட்டி இதோ.
----------------------

கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இடமென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர்களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சிசாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்:

வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்':

வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்:

கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித்துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி. பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆசிரியை ஆவேசம்:

வ.உ.சி. பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது:

வ.உ.சி. பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர்களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும்போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

"எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு"

கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!

ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள "தேசிய பெண்கள் வாரியமும்" (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த "கள்ளக்காதல்" (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.

ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் "ஆண்மைக் குறைபாடு" பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!

Sec. 497 of Indian Penal Code:- "Adultery"

Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி)

சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-

மயிலாடுதுறை அருகே பயங்கரம்:
பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம், நவ.12 - 2009. செய்தி - தினத்தந்தி. (சுட்டி இதோ)

கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.

சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-

கள்ளக்காதல்

நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.

உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.

அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

6 பேர் கைது

ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

துப்புத் துலக்கும் செல்ஃபோன்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரியும் "தி ஹிந்து" ஒரு தீவிர பெண்ணியவாதம் பேசும் (Ultra-feminist) நாளிதழ் என்பது. இதுபோன்ற பெண்ணியவாத ஊடகங்கள் பெரும்பாலும், "மனைவி கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாள்" என்ற செய்தியைக்கூட "மனைவி தன் கையில் கத்தியுடன் இருக்கும்போது அந்த கொடுமைகாரக் கணவன், தன் மனைவிமீது கொலைப்பழி விழவேண்டும் என்னும் தீய எண்ணத்தில் அந்தக் கத்திமீது தன் கழுத்து சரியாகப் பாயும் வகையில் விழுந்து மாண்டான்" என்றுதான் எழுதுவார்கள்!

அத்தகைய செய்தி வெளியாகும்போது, இன்னொரு பக்கத்தில் ஒரு ஆஸ்தான பெண்ணிய எழுத்தாளர் பெயரில் ஒரு பாஷ்யக் கட்டுரை வெளியாகும். அது "இதுபோல் தன்னை மனைவி கையால் மாய்த்துக் கொண்டு பெண்ணினத்திற்கு மாசு கற்பிக்கும் போக்கு ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் ஆணாதிக்க ம்னப்பான்மையின் வெளிப்பாடு. நம்நாட்டுப் பெண்கள் விழிப்படைந்து தங்கள் உரிமைகளை உணர்ந்து, முழுமையான விடுதலையை இன்னமும் பெறவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன" என்ற ரீதியில் இருக்கும். இதற்கு பின்பாட்டு பாடுவதற்கென்று மறுநாள் அரை டஜன் பெயர்களில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பிரசுரமாகும். இதுதான் நாம் அன்றாடம் காணும் வாடிக்கை.

அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிகொண்டு அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இன்னும் சில "சமூக ஆர்வலர்கள்" இந்த "கேப்"பில் புகுந்து "கள்ளக்காதலை 'கள்ளக்காதல்' என்று அழைக்கக் கூடாது" என்பதுபோல் அறிக்கை விடுவார்கள். உடனே அரசியலில் துண்டு போட இடம் தேடிக்கொண்டிருக்கும் சில முன்னாள் நடிகர்கள் "மனைவி கள்ளக்காதல் செய்வதற்கு கணவன்தான் காரணம். ஆகையால் மனைவி கணவனைக் கொன்றால் மற்ற சட்டங்களில் உள்ளதுபோல அதற்கு கணவனையே பொறுப்பாளி என்று தீர்மானித்து, அவன் தப்பித்தவறிப் பிழைத்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்; அவன் செத்தால் அவனுடைய பெற்றோரைச் சிறையிலடைக்க வேண்டும். மேலும் அவர்களுடய சொத்தையும் பிடுங்க வேண்டும் (இதுதான் முக்கியமான கூறு!!) - இப்படி அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்!

ஆனால், இன்றைய "தி ஹிந்து" இதழில் கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொலை செய்த செய்தி பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பூசி மெழுகாமல் "உள்ளது உள்ளபடி" இத்தகைய செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருப்பது ஒரு காலத்தின் கட்டாயம் எனலாம். எனெனில் தற்காலத்தில் பல பத்தினிகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதை ஓவர்டைம் போட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் கள்ளக்காதல் என்பது இருமுனையிலும் கூறான கத்தி என்பதை அது அந்தக் கள்ளக்காதலியையும் பதம் பார்க்கும் காட்சிகள் மூலம் காணமுடிகிறது.

சரி, இப்போது இன்றைய சூடான "க.கா.கொ"-விற்கு வருவோம்:-

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

அம்பத்தூர், நவ.10 - 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசுக்கு போன்

ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ரகசிய கண்காணிப்பு

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

திட்டமிட்ட கொலை

ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

இதன்காரணமாக சுதாகரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். அதில் இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு :-

உல்லாசமில்லை

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. (இது கள்ளக்காதலை jutify செய்வதற்கு இவர்கள் கண்டுபிடித்துள்ள லேட்டஸ்ட் அஜால்குஜால் சாக்கு. உணமையில் இத்தகைய பெண்குலத் திலகங்கள் கள்ளக்காதலுக்கு அலைவதே வரையிட்டியான உல்லாசத்திற்காகத்தான். ஒருவனிடம் மட்டும் சுகம் கிடைத்தால் அடங்குமா அந்த வெறி! ஆண்குழந்தைகளைப் பெற்றவர்கள் ராத்தூக்கம் இல்லாமல் அலைவதுதான் அவர்களுடைய விதி!)

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை `மாமி மாமி' என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

கணவர் கண்டிப்பு

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம் அன்று தொடங்கி தினமும் உல்லாசமாக இருந்து வந்தோம். கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

திட்டம் தீட்டினோம்

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு பேச்சு வாக்கில், "இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை'' என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தின் அருகில் உல்லாசம்

பின்னர் சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம்.
பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்றுபடுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்.

இவ்வாறு ஷீலா கூறினார்.

சிறையில் அடைப்பு

ஷீலா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து ஷீலாவையும், ராஜேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலுக்கு அடிமையாகும் பலியாடுகள்!

இப்பொதெல்லாம் திருமணம் ஆன பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனையோ, பெற்ற குழந்தைகளையோ, கள்ளக்காதலனைக் காதலிக்கும் இன்னொரு பெண்ணையோ, (இதில்கூட சக்களத்தி சண்டை!) கள்ளக்காதலனை மணக்கப்போகும் பெண்ணையோ கொலை செய்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவதை நீங்கள் தினம் காண்கிறீர்கள். இது போன்ற சீரழிவு எதைக் காண்பிக்கிறது? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் படுபடுகிறேன் என்று பறைசாற்றிக் கொண்டு பலவழிகளில் பணம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் தங்கள் முயற்சியில் அடைந்துள்ள வெற்றியைத்தானே சுட்டிக் காண்பிக்கிறது!

ஆம், நம் பாரம்பரிய குடும்ப வாழ்வை முறையைச் சிதைத்து, பெண்கள் மனத்தில் தங்கள் உடல் சுகமும், விதவிதமான செக்ஸ் அனுபவத் தேடலும்தான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றும், அத்தகைய வெறித்தேடுதலுக்கு எதிரியாகத் தோன்றும் எவரையும் கொன்று போட்டால்கூட பரவாயில்லை என்றும் நம்ப வைத்து, அவர்களின் மனப்பாங்கை தரம் தாழ்த்தும் தங்கள் முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்து வருகிறார்கள்!

இப்போதெல்லாம் ஒரு மணமான பெண்ணோ, ஆணோ கொல்லப்பட்டால் அதில்
"கள்ளக்காதல்" ஆங்கிள் இருக்கிறதா என்று துப்பறிய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்! அதனால் அந்தப் பெண்மணியை சந்தித்தவர்கள், அவர் செல்ஃபோனில் தொடர்பு கொண்ட நபர்கள் இவர்கள் மேல் சந்தேகக்கண் படத்தொடங்கி அதனால் பல கேசுகளில் முக்கிய தடயங்கள் சிக்குவதை நாம் கண்டு வருகிறோம்.

மேலும், இத்தகைய கள்ளக் காதல்களினால் அந்தக் கள்ளக்காதலிகளே பலியாகும் நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கின்றன. அத்தகைய ஒரு செய்தியை இப்போது வாசியுங்கள்:

புதுப்பெண்ணை கொலை செய்து உடலை புதைத்தது ஏன்? கைதான கள்ளக்காதலர் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி, நவ.5- 2009 தினத்தந்தி

புதுப்பெண்ணை கொலை செய்து வயலில் உடலை புதைத்தது ஏன் என்பது பற்றி கைதான கள்ளக் காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதைக்கப்பட்ட பெண் பிணம்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரை குறையாக மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் லால்குடி பக்கம் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்பரசி (19) என்பதும், முத்தரசநல்லூர் காமராஜர்புரத்தை சேர்ந்த பெயிண்டர் அங்கமுத்து (வயது25)வுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

பெயிண்டர் கைது

அன்பரசியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கமுத்து தான் அன்பரசியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வயலில் புதைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கமுத்துவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

செல்போன் மூலம் காதல்

எனது நண்பர்கள் மூலம் அன்பரசியின் செல்போன் நம்பர் கிடைத்தது. செல்போனில் அடிக்கடி பேசி அன்பரசியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். அவர் என்னை பார்க்க அடிக்கடி முத்தரசநல்லூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த வாரம் எனது வீட்டுக்கு வந்த அன்பரசி தனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கணவன் முத்துக்குமாரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்றும் கூறினாள். நான் ஏற்கனவே எங்கள் ஊரைச்சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். அவளையே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் அன்பரசி எனது வீட்டில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து அவளை இருங்களூரில் உள்ள எனது அக்காள் வீட்டில் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டில் அன்பரசி என்னுடன் இருந்ததை காதலி நந்தினி பார்த்து விட்டாள்.

துப்பட்டாவால் இறுக்கி...

அன்பரசியை பார்த்ததும் என்னிடம் தகராறு செய்த நந்தினி நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என விஷம் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினாள். நான் அவளை சமாதானம் செய்து, நந்தினியை அவளது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வந்தேன். அப்போது அன்பரசி என்னிடம் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி தகராறு செய்தாள்.

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவள் இருந்தால் காதலி நந்தினி நம்மை விட்டு போய்விடுவாள், திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடும் என நினைத்து அன்பரசியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்தேன். இதில் அவள் மூச்சு திணறி கீழே விழுந்ததும் யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சென்று வயல்வெளியில் புதைத்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

அங்கமுத்து நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விபரீத கள்ளக்தாதல்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.

இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.

பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

தினத்தந்தி. நாள் நவ.5 - 2009

பகுதி - 1

சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்

சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

காயத்ரி மாலா

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

திடீர் மாயம்

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ஏரிக்கரையில் பிணம்

இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது

சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலையா?

காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.

அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை கைதி

விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.

காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதல்

அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.

தலைமறைவு சந்திப்பு

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.

கல்லால் தாக்கி கொலை

அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

செல்போன் மூலம் துப்பு

சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.

இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.

=========

பகுதி - 2

ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

"பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணி மனைவி

"எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்

அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.

பரோலில் வந்து தலைமறைவு

இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.

உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்

பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.

அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று நிர்பந்தித்தார்.

மிரட்டியதால் கொன்றேன்

அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது' என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்' என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.

செல்போன் காட்டி கொடுத்தது

இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.

காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.''

இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

==========

பகுதி - 3

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.

இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

தாய்மையின் பெருமை

3 குழந்தைகள், கள்ளக்காதலனுடன் இளம்பெண் விஷம் குடித்தார்
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

இடுக்கி, நவ.2 - 2009. தினத்தந்தி

3 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் இளம் பெண் விஷம் குடித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இளம்பெண்

இடுக்கி மாவட்டம் ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது33). இவர் கணவனை பிரிந்து தனது 3 குழந்தைகளான சங்கீதா (9), சரிதா (7), கங்கா (4) ஆகியோருடன் மண்ணாக்குடியில் உள்ள சகோதரன் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் அனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஹரி (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.

மயங்கிய நிலையில்...

இந்த நிலையில், அங்குள்ள தனியார் தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஹரியின் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்டோ அருகே சென்று பார்த்தபோது அங்கு ஹரி, அனிதா மற்றும் 3 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் இருந்தது.

இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, 5 பேரையும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹரி- அனிதா கள்ளக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால், 3 குழந்தைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து அவர்களும் தின்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்!

Disclaimer:

ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு தொடங்கியிருக்கும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்"திற்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு இல்லை. அதைக் குறைவு படுத்தும் நோக்கில் இந்த இடுகை எழுதப்படவில்லை.

எதெதெற்கோ இன்ஷ்யூர் செய்கிறார்கள். திருமணமான ஒரு கணவன், தன் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்ற காரணத்தினால் என்றைக்கு மனைவி கையால் சாகடிக்கப் போகிறானோ தெரியாது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு சிறப்பு காப்பீடு தேவை. அதாவது, கள்ளக்காதல் வெறியின் மேலீட்டால் கொலை செய்யப்படும் கணவனின் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மற்றும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ், 498A, DV Act போன்ற கேசுகளிலிருந்து கணவர்களை பாதுகாக்கவும், மேலும் கள்ளக்காதலைத் தேடி மணமான பெண்கள் அலைவதன் காரணம் கணவனின் ஆண்மைத்தன்மை (இதற்கு என்ன விளக்கம் என்பதை மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்) குறைவுதான் என்று கூறி ஒட்டுமொத்த ஆண்குலத்தையுமே இழிவு படுத்தும் மனோரமாவிடமிருந்து கணவர்களைக் காப்பாற்றவும், அவசியம் ஒரு "கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்" தேவை. அப்போதுதான் எதிர்வரும் ஆண் சிசுக்கொலை நிகழ்வுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்!

மேலும் கள்ளக்காதலன் கூட கணவன் போல் கண்ட்ரோல் செய்ய எத்தனித்தால் அவனையும் இந்தப் புதுமைப்பெண்கள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். என்றாலும் கள்ளக் காதலனுக்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பது ரொம்ப ஓவர். அதனால் கணவனுக்கு மட்டும் இப்போது கேட்போமே!

இப்போது கள்ளக்காதலினால் கணவனைக் கொலை செய்த காரிகை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட கதையைப் படியுங்கள்.

சிவகிரி, நவ.2 - 2009. தினத்தந்தி

சிவகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியது.

கள்ளத்தொடர்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குலவிளக்கு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45), விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த மர அறுப்பு மில் அதிபர் தங்கவேல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது கள்ளத் தொடர்பு பொன்னாத்தாளின் கணவர் சண்முகத்திற்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் பொன்னாத்தாளை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

விவசாயி கொலை

இந்த நிலையில் கடந்த 12-3-2000 அன்று கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூரில் சண்முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை தென்னிலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவரது பெயர் முருகேசன் என்ற முகிலன் என்பதும், முத்தூரில் உள்ள தங்கவேலின் மர அறுப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் முகிலன் முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

தீ வைத்து...

அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குலவிளக்கு நாத்தக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகத்தை, தானும், சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள், மாமனார் ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி, கள்ளக்காதலன் தங்கவேல் ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை டிராக்டரில் கொண்டு வந்து மொஞ்சனூர் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதையும் விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் முகிலனை சிவகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.

வலைவீச்சு

கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பொன்னாத்தாள், அவரது கள்ளக் காதலன் தங்கவேல், தந்தை ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை

கணவனை வேண்டாம் என்று உதறிவிட்டு கள்ளக் காதலனுடன் குடித்தனம் நடத்தியவள், கள்ளகாதலனுடன் சண்டை போட்டுச் செத்தாலும், ஒரிஜினல் புருஷன்தான் குற்றவாளி எனக்கருதி அவன் மீது விசாரணை நடத்துவார்களாம். ஏனென்றால் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது வரதட்சணைக் கொடுமையால்தான் என்ற முன்முடிவுடன் கணவனையும் அவனது பெற்றோரையும் குற்றவாளிகள் என்ற அனுமானத்துடன் (Section 498A & 304B of IPC and "Presumptive Section" 113-B of the Indian Evidence Act) ஆர்.டி.ஓ விசாரணை நடக்கவேண்டும். இதுதான் இந்தியச் சட்டங்களின் கேவல நிலைமை. பெண்டாட்டி கள்ளக்காதலனுடன் ஓடிப்போன கொடுமை போதாதென்று இந்தக் கேவலம் வேறு அவனுக்கு!

ஐயமிருந்தால் நான் மேற்குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளைப் பற்றி கூகிளில் தேடிப்பாருங்கள்.

நிச்சயம் அனைத்து ஆண்களும் திருமணம் செய்துகொண்டு இத்தகைய இன்பங்களை துய்க்கவேண்டும்!

இந்தச் செய்தியின் முடிவில் இருக்கிறது அந்த கொடுங்கோனமை சட்ட நடவடிக்கை.

ஆலந்தூர், நவ.1- 2009. தினத்தந்தி

திருமணமான 4 மாதத்தில் கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவருடைய மனைவி சுபா (18). இவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.

இது பற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் வந்தது. மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் சங்கரபாண்டியன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி விசாரணை நடத்தியபோது பல தகவல் கிடைத்தன. திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்தவர் சுபா. இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. பின்னர் ஆடி மாதம் சுபாவை திண்டிவனம் அழைத்து வந்தனர்.

அப்போது சுபாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேசுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது சுபா தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலன் ரமேசுடன் வாழ்வேன் என்று கூறினார்.

இதையடுத்து சுபா, காதலனுடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கரணை வந்து குடும்பம் நடத்தினார். இதற்கிடையே கூலி வேலை செய்யும் ரமேஷ், சுபாவை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதற்கு சுபா மறுப்பு தெரிவித்தார். இதனால் சுபா, ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுபா வீட்டில் தீக்குளித்தார். இதை கண்ட ரமேஷ், சுபாவை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் படுகாயம் அடைந்தார். 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையின்றி சுபா பரிதாபமாக செத்தார்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் வெளியாயின. இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!

நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!

தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.

சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.

ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.

ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!

செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)

இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.

கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.

"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)

=========================

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

திரு.வி.க.நகரில் 2-வது பயங்கர சம்பவம்:
கள்ளக்காதல் போட்டியில் குத்துச்சண்டை வீரர் படுகொலை
வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது

சென்னை, அக்.23- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை திரு.வி.க. நகரில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கள்ளக்காதல் போட்டியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு நண்பரை போலீசார் தேடுகிறார்கள்.

சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 23). திருமணம் ஆகாத இவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் சந்திரனின் நண்பர்கள் ஆவார்கள். இவர்களும் கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலைதான் செய்து வந்தனர்.

சந்திரன் பார்க்க அழகாக இருப்பார். இவர் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார். சாதாரண குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாடிபில்டரும் கூட. இவருக்கு நிறைய பெண்கள் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

காதல் போட்டி

ரம்யா என்ற இளம் பெண் ஒருவரோடு ராஜேஷ் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். ரம்யா கே.கே.நகரில் வசித்து வந்தார். அவரது தாய் வீடு திரு.வி.க.நகரில் உள்ளது. திருமணமான அவர் தாய் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும்போது ராஜேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷை அடிக்கடி சந்தித்து உல்லாச விருந்து படைத்து வந்தார். ராஜேஷின் நண்பர்களுக்கும் ரம்யா விருந்து படைப்பது உண்டு.

இந்த நிலையில், ரம்யாவுக்கு குத்துச்சண்டை வீரர் சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேஷ் கோஷ்டியை உதறிவிட்டு சந்திரனோடு நெருக்கமாக பழக ஆரம்பித்தார். சந்திரனுக்கும் இன்ப விருந்து படைத்தார்.

இந்த விஷயம் ராஜேசுக்கும், அவரது நண்பர்களுக்கும் தெரிந்து அவர்கள் கோபம் அடைந்தனர். சந்திரனை எச்சரித்தனர். ரம்யாவுடன் உள்ள தொடர்பை விட்டுவிடும்படி கூறினார்கள். "உனக்கு நிறைய பெண்கள் பழக்கம் உள்ளது. எங்களுக்கு ரம்யா ஒருத்திதான் இருக்கிறாள். அவளை தட்டிப் பறிப்பது நியாயமல்ல. அவளை எங்களுக்கு கொடுத்துவிடு" என்று ராஜேஷ், சந்திரனிடம் கெஞ்சினார்.

அதற்கு சந்திரன், "பல் இருக்கிறவன் கடிக்கத்தான் செய்வான், ரம்யாதான் என்னை விரும்பி காதலிக்கிறாள். என்னால் அவளை விடமுடியாது" என்று கூறிவிட்டார்.

இது சந்திரன் மீது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராஜேசும், அவரது நண்பர்களும் சந்திரன்மீது கடும் கோபம் கொண்டனர். காதலியை தட்டிப் பறித்த சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு திரு.வி.க.நகர் சமூகநலக்கூடம் அருகே ராஜேஷ், அவரது நண்பர்கள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது சந்திரன் அந்த வழியாக சென்றார். அவரையும் மது அருந்தும்படி அழைத்தனர். அவர்களுடைய சதித்திட்டம் தெரியாமல், சந்திரன் அவர்களோடு உட்கார்ந்து மது அருந்தினார்.

திடீரென்று 3 பேரும் சேர்ந்து சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். சந்திரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சந்திரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

2-வது கொலை சம்பவம்

திரு.வி.க.நகரில் கடந்த வாரம்தான் பங்க் ராஜ் என்ற ரவுடி வெட்டி கொல்லப்பட்டார். அந்த கொலையின் ரத்தம் காயும் முன்பே, சந்திரன் கொலை செய்யப்பட்டது போலீஸ் வட்டாரத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திரு.வி.க.நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை நகரில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பெரும்பாலும் கள்ளக்காதல் பிரச்சினைகளே காரணமாக இருப்பதாகவும், கள்ளக்காதல் கலாசாரம் அதிகரிப்பதால்தான் குற்ற செயல்களும் அதிகரிக்கிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை

வன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்!

சேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்

பெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.

பெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.

கண்டித்தார்

இந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.

செல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.

கூலிப்படையை ஏவி கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், "எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.

இதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

முந்திக்கிட்டான்யா!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விடுவாரோ என்று பயந்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாலூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

கோலார் தங்கவயல், அக்.21- 2009. செய்தி - தினத்தந்தி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு நேத்ராவதி (28) என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

தற்போது மஞ்சுநாத் கோலார் மாவட்டம் மாலூர் கொண்டசெட்டிஹள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி நேத்ராவதியை எரித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதைத்தொடந்து, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

கள்ளத்தொடர்பு

மஞ்சுநாத்தின் சொந்த ஊரான அரிசிகெரேயில் வசித்தபோது, அவரது மனைவி நேத்ராவதிக்கும், தும்கூர் மாவட்டம் பாவகடா பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சுநாத் தனது மனைவி நேத்ராவதியிடம், ரவிச்சந்திரன் உடனான உறவை துண்டித்து விடும்படி கண்டித்து இருக்கிறார். ஆனால், நேத்ராவதி அப்போது மட்டும் பேச்சுக்கு ஒப்புக் கொண்டு, ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுநாத், நேத்ராவதியை அரிசிகெரேயில் விட்டு விட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாலூருக்கு வந்து விட்டார். இந்த நிலையில், ஊர் பெரியவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து, சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மஞ்சுநாத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டசெட்டிஹள்ளிக்கு வந்து குடியேறினார்.

ஆனாலும், அதன்பிறகும் நேத்ராவதி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. கள்ளக்காதலன் ரவிச்சந்திரனுடன் செல்போனில் பேசுவதுடன் கள்ளதொடர்பும் வைத்திருந்தார்.

எரித்துக் கொலை

இதனால் வேதனை அடைந்த மஞ்சுநாத், தனது மனைவி நேத்ராவதியை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு நேத்ராவதியை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். அப்போது, அங்கு நேத்ராவதியின் கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் மனைவி நேத்ராவதியும், கள்ளக்காதலன் ரவிச்சந்திரனும் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்று மஞ்சுநாத்துக்கு பயம் வந்து விட்டது. உடனே வீட்டுக்குள் ஓடி சென்று உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, ரவிச்சந்திரனை தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்து ஓடி விட்டார்.

அதன்பிறகு போலீசில் மனைவி நேத்ராவதி புகார் செய்து விடுவாளோ என்று பயந்து, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் பொழுது விடிவதற்குள் மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே கம்பனஹள்ளி கிராமத்தில் உள்ள தைல மர தோப்புக்கு எடுத்து சென்றார். அங்கு நேத்ராவதியின் உடலை தீ வைத்து எரித்தார்.

அதன்பிறகு ஊருக்கு செல்வதற்காக மஞ்சுநாத் தான் வேலை செய்யும் குவாரி உரிமையாளரிடம் ரூ.1,500 வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்காதலியுடன் தீக்குளிப்பு

பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு கள்ளக்காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்

சென்னை, அக். 13- 2009

சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கடாத்திரி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ் (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜயலட்சுமி, கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார்.

விஜயலட்சுமிக்கு வேறு சில ஆண்களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை, கள்ளக்காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.

இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு கள்ளக் காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த்துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்படத் தயாரானார்.

திடீரென ஆவேசமான சங்கர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.

விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர்.

பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். (அது அந்தக் கணவனின் தவறு. கள்ளக்காதலைப் போய் தவறாக நினைக்கலாமா? அது ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமை அல்லவா! அதற்காகத்தானே மனோரமா போன்றவர்கள் அயராது பாடுபடுகிறார்கள்!)

அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித்தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண்பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது."

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர், தினத்தந்தி

=======================


ஐயோ, பாவம் அந்த விஜயலட்சுமி அம்மையார். அவர் மட்டும் தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். மாதர் திலகம் மனோரமா அவர்கள் கள்ளக்காதலுக்கு கணவனின் ஆண்மைக் குறைவுதான் காரணம் (அதாவது அவனுடைய ஆண்குறியின் விறைப்புத் தன்மை மனைவியின் தேவைக்கேற்ப இல்லை - அதுதானே பொருள்!) என்று போராடத் துவங்கியிருக்கும் இயக்கத்தில் சேர்ந்து அவர் புகழ் பெற்றிருக்கலாம். அவருடைய கள்ளக்காதலர்களுக்கும் சேர்த்து முன்னாள் கணவனையே படியளக்க வைத்திருக்கலாம். அதற்குத்தானே தேசிய பெண்கள் வாரியம் சட்டம் இயற்றக் கோரியிருக்கிறது!

கள்ளக்காதலர்களுக்கு இனிமேல் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது நம் நாட்டில்!

சரி, அந்த அப்பாவி கணவர்களின் கதி? அவன்தானே அய்யா கள்ளக்காதல் செய்யும் மனைவிக்கு பணம் கொடுத்து அழவேண்டும்? அவன் ஏன் திருமணம் செய்துகொண்டான்; அனுபவிக்கட்டும்!