வன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு

புதுடில்லி : கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

"பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்' என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், "எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது' என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. "சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்' என்று கணவர் சொல்ல, "என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை' என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். "ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்' என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.

செய்தி - தினமலர் - 20.08.2009

4 மறுமொழிகள்:

')) said...

ஆண்கள் கொடுமைப்படுத்தும் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது பெண்கள் ஆண்களை கொடுமைபடுத்தும் நிலை வந்திருக்கிறது. இனிமேல் கொடுமைக்கார பெண்களிடமிருந்து ஆண்களை பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

')) said...

ஆம் கண்டிப்பாக சட்டம் கொண்டுவரவெண்டும்...இதில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் குழந்தைகளும் அப்பாவி வயதான தாய் தந்தையர்களும்தான்... இதுபோல் கெடுமதிப்பெண்கள் கணவனை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் வயதானவர்களையும குழந்தைகளையும் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்து சிலமாதம் கழித்து பஞ்சயாத்து பேசவருகின்றனர்...

')) said...

தற்போது இந்திய தேசம் ஆண்களுக்கு எதிரியாக மாறி வருகிறது இதற்க்கு முதலாய காரணம்.இங்கே இருக்கும் அரசியல் வாதிகள் தான்.காரணமே இல்லாமல் சட்டம் போடுகிறார்கள் ஆனால் அனைத்தும் ஆண்களுக்கும் எதிராக.நாம் என்ன பவம் செய்தோம் என்டு புரியவில்லை.இதை வைத்து ஆதாரம் இல்லாமல் கைது செய்கிறார்கள்.அப்பாவியை தண்டிகிரார்கள்.இதில் கொடுமை என்னவென்றால் பல அப்பாவி பெண்களும் இதில் சிக்குகிறார்கள். ஏன் ஏதும் அறியா பச்சை குழந்தைகள் கூட சிக்குகிறார்கள்.இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க. இந்தியா எங்கே போகிறது.ஒரு நீதிபதியின் மதிப்பையே இவரை போன்றோர்கள் கேலி செய்கிறார்கள்.இதுவா இந்திய சட்டம் ?
http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/0906/23/1090623033_1.htm





')) said...

இந்திய சட்டங்கள் அனைத்தும் ஆண்களை எதிரிகளாக கொண்டவை.ஒரு பெண் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தன கணவரை குத்தவாளி என்று சொன்னால் உடனே அவரை கைது செய்து அசன்கியபடுதுகிறது.இதற்கு காரணம் நமது அரசியல் வாதிகள் தான்.இதற்கு எதிராக நாம் ஒரு வலுவான அமைப்பை துவங்கி தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி பார்த்தால் நமது நீதித்துறை எவ்வளவு படு கேவலமாக இயங்குகிறது என்று புரியும்.எனக்கு புரியவில்லை இன்னும் ஏன் நாம் செயல்படாமல் இருகிறோம்?


http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/0906/23/1090623033_1.htm