செய்தி: தினமலர் ஜூலை 31,2008 சிவகங்கை:
திருமணமாகி 2 மாதத்தில் காளையார்கோவிலை சேர்ந்த புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உட்பட 6 பேரை சிவகங்கை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காஞ்சிரத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பொன்னுமுத்து (29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும், கருங்காலி கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் செந்திலாவுக்கும் (21) 2008 மே 18ம் தேதி திருமணம் நடந்தது.
ஜூலை 1-ம் தேதி வீட்டிலிருந்து புதுமணத் தம்பதியர் காளையார்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று செந்திலா 32 பவுன் தங்க நகைகள் அணிந்து சென்றதாகவும், அவர்களை கண்டுபிடித்து தருமாறு பொன்னுமுத்து தாயார் புஷ்பம் காளையார் கோவில் போலீசாரிடம் புகார் செய்தார்.
கள்ளக்காதல்:
போலீஸ் விசாரணையில் செந்திலா திருமணத்திற்கு முன் சிவகங்கை- தொண்டி ரோட்டிலுள்ள ஒரு தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரும், அங்கு வேலை பார்த்த ஏரியூர் அருகே மாம்பட்டி பிச்சைமணி மகன் புவனேஸ்வரனும்(29) காதலித்தனர். வீட்டில் திருமண பேச்சு நடந்தபோது, காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செந்திலா திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் காதலனுடன் செந்திலா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
கணவரை கைகழுவி விட்டு காதலனுடன் வாழ செந்திலா முடிவு செய்துள்ளார். இதற்கு புவனேஸ்வரன் தீட்டிய திட்டப்படி ஜூலை1-ம் தேதி நகைகளுடன் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். பொன்னுமுத்துவும் உடன்வருவதாக வலியுறுத்தியதால், வேறு வழியின்றி அவரையும் அழைத்து கொண்டு பஸ்சில் காளையார்கோவில் சென்றனர்.
அங்கு மருத்துவமனை செல்லாமல் சிவகங்கையில் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிய செந்திலா, பொன்னுமுத்துவை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பொன்னுமுத்து மறுத்துள்ளார். வேறு வழியின்றி அவருடன் செந்திலா காளையார் கோவிலில் இருந்து சிவகங்கைக்கு பஸ்சில் வந்துள்ளார். பஸ் ஸ்டாண்டு அருகில் சுமோ காரில் காத்திருந்த புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளிகள் இருந்த இடத்திற்கு செந்திலா செல்ல, பொன்னுமுத்துவும் அங்கு சென்றுள்ளார். புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளி களை, "தன்னுடன் பணியாற்றியவர்கள்" என செந்திலா அறிமுகம் செய்துள்ளார்.
மன்றாடிய புதுமாப்பிள்ளை:
புதுமண தம்பதிகளுக்கு விருந்து கொடுப்பதாக புவனேஸ்வரன் கூற பொன்னுமுத்து தயங்கியுள்ளார். செந்திலா வலியுறுத்தியதால், பொன்னுமுத்து சம்மதித்து காரில் ஏறியுள்ளார். எம்.ஜி.ஆர்.சிலை அருகி லுள்ள ஓட்டல் ஒன்றுக்கு அவர்கள் சென்றனர்.
ஓட்டலில் சாப்பிட்ட பின் ஊருக்கு செல்ல செந்திலாவை பொன்னுமுத்து அழைத்துள்ளார். காரில் கொண்டுபோய் விடுவதாக கூறி புவனேஸ்வரனும் கும்பலும் கூற "அப்பாவியாக" பொன்னுமுத்துவும் காரில் ஏறியுள்ளார். சிவகங்கையை கடந்த சிறிது தூரத்திலேயே, செந்திலாவும், புவனேஸ்வரனும் திருமணம் செய்து கொள்ள விரும்பு வதாக கூறிய கும்பல், வீட்டிற்கு திரும்பி செல்லுமாறு பொன்னுமுத்துவை மிரட்டியுள்ளனர்.
இதை ஏற்க மறுத்த பொன்னுமுத்து, மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். செந்திலாவும் கும்பலுடன் சேர்ந்து காரிலிருந்து ஓடிவிடுமாறு மிரட்டியுள்ளார். மறுத்த பொன்னுமுத்துவை காரில் கடத்தி கொலை செய்து விழுப்புரம் பகுதியிலுள்ள காட்டில் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
கும்பல் கைது:
பின்னர் கும்பல் மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கடவூரில் புவனேஸ்வரன் கூட்டாளி ராஜாவின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினர். தகவல் கிடைத்த சிவகங்கை தனிப்படை போலீசார் செந்திலா, அவரது காதலன் புவனேஸ்வரன், கூட்டாளிகளான மதுரை ஜோசப் தெரு குமார் மகன் ராஜேஷ்(23), மதுரை மேலஅனுப்பானடி ரெங்க பாண்டியன் மகன் முருகன்(16), மதுரை புதுமீனாட்சிநகர் இகிமுத்து மகன் ராஜா(18), மதுரை கீழ்மதுரை காமராஜர்புரம் பிரகாஷ் மகன் சோமசுந்தரம்(22) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இக்கும்பலிடம் எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. சாம்சன் ஆகியோர் விசாரித்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------
இத்தனைக்கும் பிறகு அந்த அப்பாவிக் கணவன் வரதட்சிணைக் கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப் போடுவாளோ என்னவோ!!
உங்களுக்குத் தெரியுமா? குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்றால் கணவன் தான் செய்வான். மனைவி பாவம், ஒரு பாவமும் அறியாத பேதை!
இந்த நிகழ்வுகளையெல்லாம் நோக்கும்போது அரபு நாட்டுச் சட்டங்கள்தான் சரியானவை என்று தோன்றுகிறது!
புதுமாப்பிள்ளையை கொலை செய்து எரித்த மனைவி, கள்ளக்காதலன் கைது
மகளிர் கட்டப்பஞ்சாயத்து போலீஸ்!





கட்டுரை முழுதையும் பி.டி.எஃப் (PDF) கோப்பாக டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
80 வயது தாத்தா வரதட்சிணை கொடுமை செய்தாராம்!
வரதட்சணை கொடுமை வழக்கில் மதுரை பல் மருத்துவர் கைது
தூத்துக்குடி - ஜூலை 28,2008 :: செய்தி - தினமலர்
மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் மதுரை பல் மருத்துவர், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சக்தி தேவி (27) க்கும் மதுரை அண்ணாநகர் பல்மருத்துவர் பிரவீண் குமாருக்கும்(30), கடந்த ஆண்டு ஆக., 27ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 சவரன் நகை பிரவீண் குமாருக்கு தரப்பட்டது.
இந்நிலையில் கிளினிக் கட்டுவதற்கு பிரவீண்குமார், மனைவி சக்திதேவியை அவரது பெற்றோரிடம் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தினார்.அதற்கு சக்திதேவி மறுக்கவே, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரவீண்குமார் மற்றும் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக சக்திதேவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பிரவீண்குமார், அவரது தாயார் விஜயலட்சுமி(55) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், பிரவீண்குமாரின் தாத்தா சண்முகத்தை(80 வயது) தேடி வருகின்றனர்.
---------------------------
மதுரைவாழ் அன்பர்கள் யாரேனும் அந்த பல்வைத்தியர் பிரவீண் குமார் தரப்பு செய்தியை அறிந்து இங்கு மறுமொழியாக எழுதும்படி வேண்டுகிறேன் (தமிழில் எழுத இயலாவிடில் ஆங்கிலத்திலும் எழுதலாம்).
நன்றி.
குறிச்சொற்கள் 498a, harassment, misuse, victims, பொய் வழக்கு, வரதட்சணை
பெரிய இடத்து சம்பந்தம் ஆபத்துதான்!
ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியலில் பெரிய செல்வாக்குள்ள குடும்பம் என்று தெரிவு செய்து அவர்கள் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டால் ஆண்களுக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும் என்ன கதி காத்திருக்கிறது என்பதற்கு இந்த தினமலர் செய்தி ஒரு படிப்பினையாகும்:
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பந்திக்கு முன்ஜாமீன்
ஜூலை 24,2008
சென்னை:ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் கொடுத்த வரதட்சணை புகாரில், அவரது மாமனார், மாமியாருக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன்
வழங்கியது.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியனின் மகள் வினோதினி. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தனது கணவர் அரவிந்த் மீது
சென்னை அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அரவிந்த் கைது செய்யப்பட்டார்.
முன்ஜாமீன் கோரி அரவிந்தின் தந்தை நடராஜன், தாயார் தனலட்சுமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
வினோதினிக்கும், அரவிந்துக்கும் 1997ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. எனது மகனை திட்டிவிட்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வினோதினி சென்றுவிட்டார். பின்னர் அவரது தந்தை எங்களை மிரட்டினார். கடந்த 15ம் தேதி விவாகரத்து நோட்டீசை வினோதினிக்கு அரவிந்த் அனுப்பினார். அதன்
பிறகே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உள் நோக்கம் கொண்டு, பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி ரகுபதி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதாடினார். இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி யும், தேவைப்படும்போது அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
--------------------------------
இதற்கு முந்தைய செய்தி:
ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன் வரதட்சணை
கொடுமை வழக்கில் கைது
ஜூலை 21,2008,00:00 IST
சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன்,
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கைது
செய்யப்பட்டார்.சென்னை தி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மகள் டாக்டர் வினோதினி ராஜேஸ்வரி(33). இவருக்கும், தி.நகர் நடேசன் சாலையைச் சேர்ந்த இன்ஜினியர் அரவிந்த்(37) என்பவருக்கும் 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. 200
சவரன், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் சீர் வரிசைகள் செய்து திருமணத்தை கற்பூர சுந்தரபாண்டியன் நடத்தினார்.
திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அவர்களுக்கு ஏழு வயதில்
பெண் குழந்தை உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கணவரை
பிரிந்து தனியாக வாழ்கிறார் வினோதினி ராஜேஸ்வரி.அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி ராஜேஸ்வரி, "திருமணத்திற்கு பிறகு எனது கணவர் புது கார், அபார்ட்மென்ட் வீடு கேட்டார். திருமணத்திற்கு அதிகளவில் செலவானதால் அவர்கள் கேட்டதை எனது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வரும் எனது கணவர், உடன் நண்பர்களை அழைத்து வந்தார். குடித்துவிட்டு அடித்து உதைத்தார். அவரை பிரிந்துச் சென்ற பின்பும் எனக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின" என புகார் கொடுத்தார்.
அசோக் நகர் உதவி கமிஷனர் சேது தலைமையிலான போலீசார், இன்ஜினியர் அரவிந்திடம் விசாரணை நடத்தினர்.கணவன், மனைவி இருவரையும் நேரில் அழைத்து தொண்டு நிறுவன பெண் சாந்தி என்பவர் கவுன்சிலிங் கொடுத்தார்.
"குழந்தையின் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறேன்" என, அரவிந்த் கூறினார்.
"என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பொய் சொல்லும் அரவிந்த் அவரது பெண் தோழிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன்" - என வினோதினி ராஜேஸ்வரி கூறினார்.
கணவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் வினோதினி ராஜேஸ்வரி உறுதியாக இருந்ததால், அரவிந்த் மீது பெண் கொடுமை தடுப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அரவிந்த், சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள் 498a, harassment, law, misuse, victims, கொடுமை, பொய் வழக்கு, விவாகரத்து
வரதட்சணை வழக்கில் மாஜிஸ்திரேட் மனைவி கைது
கோவை : வரதட்சணை கொடுமை வழக்கில், மாஜிஸ்திரேட் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடமதுரை, குருந்தாச்சல் நகர் ரங்கம்மாள் கார்டனைச் சேர்ந்தவர் ஜக்கிரியா (வயது: 30), 2004-ல் ஜமீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கணவர் ஜக்கிரியாவும், குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு ஜமீலாவை துன்புறுத்தியதாக ஜமீலா கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதில், கணவர் ஜக்கிரியா, மாமியார் குளோரி, கணவரின் அக்கா ரோஜா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று ரோஜாவை கைது செய்தனர். ஜே.எம்.எண் மூன்றாம் கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஜா, 15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ரோஜா, மாஜிஸ்திரேட் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
~ செய்தி - தினமலர் ஜூலை 19,2008
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இப்போது ஒரு மாஜிஸ்டிரேட் மனைவியையே தீண்டிவிட்டது இந்த 498a வரதட்சிணைச் சட்டம்!
கணவருக்கு 'ஜீவனாம்சம்' ரூ.8 லட்சம் தந்த மனைவி
சென்னையில் நடந்த விவாகரத்து வழக்கில் கோர்ட்டு தீர்ப்புபடி நடவடிக்கை.
விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் நலன்
பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம், மனநிலை பாதிக்கப்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி: தினகரன் 15.07.2008
குறிச்சொற்கள் divorce, குடும்பம், சட்டம், பொய் வழக்கு, விவாகரத்து