குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மனைவி “வரதட்சணை” என்ற மந்திரச் சொல்லைச் சேர்த்தால் “498A" சட்டம் பாய்ந்து கணவன், அவனுடைய பெற்றோர், சகோதரி, சகோதரியின் குழந்தைகள், நண்பர்கள், அணடை அயலார்கள் அனைவரையும் கைது செய்யப் படுவார்கள்.
ஆகா, எவ்வளவு சௌகரியம்! பெண்விடுதலை என்பது இப்படியல்லவா நிகழ வேண்டும்!
ஆமாம், கணவனின் பெற்றோரும் சகோதரியும் பெண்கள்தானே என்கிறீர்களா? இந்தச் சட்டத்தின் கண்களில் அப்படி இல்லை! ரேணுகா சவுத்திரியும் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும்தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்!
இப்போது செய்தியை படியுங்கள்:-
புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்தவர் மீது வழக்கு
ஏப்ரல் 12,2009, 2009
மதுரை : திருப்பரங்குன்றம் அருகே மனைவியின் புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்த கணவர் உட்பட நால்வர் மீது அனைத்து பெண்கள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளத்தை சேர்ந்த சரவணசுந்தரம். இவருக்கும் அபிராமிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இவர்களது மகள் ஆத்மிரா(3). பெற்றோர் பேச்சை கேட்டு சரவணசுந்தரம் அபிராமியை அடிக்கடி அடித்து பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விடுவார். அபிராமியின் பெற்றோர் சமாதானம் செய்வர். கடந்த ஏப்., 5ம் தேதி மாமியார் சுமதியிடம் சொல்லி விட்டு பக்கத்துவீட்டிற்கு சென்று திரும்பிய அபிராமியை சரவணசுந்தரம் அடித்துள்ளார். மேலும் அபிராமி கருமாத்தூர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறார். அவரை படிக்க கூடாது என கணவர் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது புத்தகங்களை வாங்கி தீ வைத்து எரிக்க வைத்தனர். இதனை தட்டி கேட்ட அபிராமி, அவரது தந்தையையும், தாயாரையும் சரவணசுந்தரமும், அவரது குடும்பத்தினரும் தாக்கினர். இதுகுறித்து அபிராமி அனைத்து பெண்கள் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து சரவணசுந்தரம், அவரது தந்தை பாலசுப்ரமணியன், தாயார் சுமதி, சகோதரர் பிரகாஷ் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
வரதட்சணை புகாரில் புதுமைகள்
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
கணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை
என்னை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்யவில்லை சென்னை மார்வாடி புதுப்பெண் குமுறல்!
சென்னை, ஏப்.11- 2009
என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்று புதுப்பெண் அழுது குமுறினார்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 4-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் சந்த் ஜெயின். இவருடைய மகள் ஷர்மிளா(வயது 23). மார்வாடி பெண். பி.காம். தொலைதொடர்பு வழியில் படித்துவருகிறார். இவருக்கும் மேற்கு மாம்பலம் லேக் அவென்னிவில் வசிக்கும் சஜன் ராஜ் கிவேஷ்ரா மகன் பதம் சந்த் கிவேஷ்ராவுக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன. (இது வக்கீல்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட்)
இந்த நிலையில் ஷர்மிளா அவருடைய கணவர் மற்றும் மாமனார் சஜன் ராஜ் கிவேஷ்ரா, மாமியார் புஷ்பா, நாத்தனார் வசந்தா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு எம்.கே.பி.நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஷர்மிளா கண்ணீர்விட்டு அழுதார்.
அவர் அழுது கொண்டே கூறியதாவது:-
நான் உடல் ஊனமுற்றவள். நான் திருமணம் ஆன 4 நாட்கள் மட்டும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்தேன். தனியாக குடித்தனம் வைத்தனர். ஆனால் எந்த பொருளும் சமைக்க இருக்காது. எனவே எனது தந்தை வீட்டில் இருந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தார்கள். ஆனால் மாமியார் வீட்டிலும் போய் வேலை செய்யச்சொல்வார்கள். ஆனால் டிபன் கூட சில நாட்கள் தரவில்லை. உன் தந்தையிடம் பேசி குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், மேலும் 2 மோதிரங்கள் வாங்கிதரச்சொல் என என் கணவர் கூறினார்.
அதன்படி அந்த பொருட்களை என்னுடைய அப்பா வாங்கித்தந்தார். பின்னர் எனது கணவர் தினமும் அடித்து உதைப்பார். ஒரு கடையும் பிளாட்டும் வாங்கிவா என்பார். மேலும் வியாபாரத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டார். எனது மாமியார், மாமனார்தான் இதற்கு முக்கிய காரணம். இன்னும் அங்கு இருந்தால் எப்படியும் கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்னை கொலை செய்துவிடுவார்கள். உயிரோடு தந்தைவீட்டிற்கு தப்பி ஓடிவிடுவோம் என்று எண்ணி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் போன் பெற்று எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் வந்து என்னை எனது பிறந்த வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டார்.
ஆனால் எனது கணவர் அடித்ததால் உடல் முழுவதும் உள் காயங்கள் இருந்தன. வலி அதிகமாக இருந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். பணத்திற்கு ஆசைப்பட்ட எனது கணவருடன் இனி நான் வாழ விரும்பவில்லை. எனது கணவர் மற்றும் என்னை இந்த அளவுக்கு சித்திரவதைபடுத்த காரணமாக இருந்த மாமனார் மாமியார் நாத்தனார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். திருமண நாளில் இருந்தே எனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமை படுத்தும்போதும் சரி, வரதட்சணை கேட்கும் போதும் சரி ``எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கு பெரிய பெரிய இடத்தில் தொடர்பு உள்ளது. எங்கள் மீது எந்த புகார் எங்கு கொடுத்தாலும் எடுபடாது'' என்றே சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே நான் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தும் போலீஸ் நிலையத்தில் எனது கணவரை ராஜ மரியாதையுடன் விசாரித்துவிட்டு அவரை கைது செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். நான் இனி யாரிடம் முறையிடுவேன். இவ்வாறு கூறிய ஷர்மிளா அழுது கண்ணீர்வடித்தார்.
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க!
லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த அமைப்பு , ஆண் வாக்காளர்களுக்கு ஒரு அதிரடி வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது:
விவாகரத்து வழக்குகள் பெருக, இந்த சட்ட சலுகைகள் தான் காரணம். பெண்களை தூண்டி விடும் இந்த சட்டங்களை வாபஸ் பெறவும், குடும்ப அமைதிக்கு வழி வகுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.
~ by s muthukumar,India
~ by R Suresh,India
குறிச்சொற்கள் 498a, divorce, dv act, harassment, husbands, misuse, victims, ஆண்பாவம், பொய் வழக்கு
பதினோரு பேரை மணந்த பாவை

இத்தகைய திருமண மோசடியில் அவளுடைய சகோதரி நசியா பேகம் மற்றும் பெற்றோர் இக்பால் பாஷா, குல்னாஸ் ஆகியோரும் கூட்டாக ஈடுபடுவார்களாம்.
இவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருக்கும் நல்ல பசையுள்ள வியாபாரிகளைக் குறி வைத்து கௌசர் பேகத்தை அனுப்பி மயக்கி விடுவார்களாம். பிறகு திருமணத் திட்டத்தை முன் வைப்பார்கள். பிறகு தான் கொண்டு வந்த நகை முதலியவற்றோடு அந்த அப்பாவி கணவனுடைய உடமைகளையும் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவது மட்டுமின்றி, அந்தக் கணவன் மற்றும் பெற்றோர் மேல் வரதட்சணைச் சட்டத்தின் மேல் (498A) வழக்கு போட்டு பல லட்சங்களைக் கறந்து விடுவார்கள்.
ஆனால், கடைசியாக இந்தப் புதுமைப் பெண்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி 20 லட்சம் இழந்து, அவர்கள் அமர்த்திய அடியாட்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சயீத் அஹமது என்ற ஏற்றுமதி வியாபாரி சயான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் இந்த திருமணத் தொடருக்கு இப்போது ஒரு முடிவு கிட்டியிருக்கிறது.
குறிச்சொற்கள் 498a, divorce, harassment, misuse, victims, ஆண்பாவம், சட்டம், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி
கைதுதான் முக்கியம்!
கணவன், மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அது உடனே “வரதட்சணை” என்ற சாயம் பூசப்பட்டு இபிகோ 498A பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டு கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் கைது செய்யப்படும் விந்தையை அன்றாடம் காண்கிறீர்கள். ஏன்?
சிம்பிள்! அதற்கென்றே ஒரு கொடுங்கோன்மை சட்டம் கைவசம் இருக்கிறதே, பிறகு என்ன, அதைக் கையிலெடுத்து பழி வாங்கும் வெறியைத் தணித்துக் கொள்ளலாமே!
அதன்படி புகார் கொடுப்பவர்களுக்கு எந்த வித முகாந்திரமோ, சாட்சியமோ, தரவோ கொடுக்கவேண்டியதில்லை. இன்னார் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தாலே போதும். மேலும் இந்த சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் அதிசயங்களைப் பாருங்கள்:
1. கொடுக்கப்பட்ட புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுதும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்தவர் மேல் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது!
2. புகார் கொடுக்கப்பட்ட உடனே புகாரில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட அனைவரையும், எந்தவித விசாரணையுமின்றி கைது செய்யவேண்டும். (”கைது” என்பதுதான் இந்தச் சட்டத்தின்மேல் பெண்களுக்கு ஒரு அட்ராக்ஷன். வக்கீல்களுக்கும்தான் - ஏனெனில் ஜாமீன் அது இது என்று காசை அள்ளலாமே!)
3. ஜாமீன் கிடையாது - cognizable offence
4. குற்றசாட்டை வாபஸ் பெற முடியாது - non-compoundable
5. வரதட்சணை கேட்டதாகவும், அதற்காக கொடுமப்ப் படுத்தியதாகவும் புகாரில் கூரப்பட்டுள்ள குற்றங்கள் எந்த காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கேசு போடலாம். உதரணமாக, உங்கள் மனைவி நீங்களும் உங்கள் தாயாரும் ஏனையோரும், 30 ஆண்டுகள் முன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக இன்று புகார் கொடுத்து வழக்கு பதியலாம். இதுபோல் வேறெந்த சட்டப் பிரிவின் கீழும் செய்ய இயலாது.
6. கண்வன் மற்றும் அவனுடைய பெற்றோருடன் சேர்த்து யாரை வேண்டுமானாலும் புகாரில் சேர்த்து குற்றவாளிப் பட்டியலில் உள்ளிடலாம். 85 வயதான மாமனார், மாமியார், 3 வயது நாத்தனார் மகன் - இப்படி.
7. சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் பெயரையும் குற்ற்வாளிகளாகச் சேர்க்கலாம். மன்மோகன் சிங் பெயரைக் கூட சேர்க்கலாம்! பொய்யான நிகழ்ச்சிகளை கற்பனையுடன் சேர்த்து எழுதலாம்.
8. குற்றங்களின் பட்டியலில் மேலும் பல செக்ஷன்களைச் சேர்ப்பதற்காக, மாமனார் கையைப் பிடித்து இழுத்தார், புளு ஃபிலிம் பார்த்தார்கள்.. இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
இதுபோன்ற பொய் வழக்கு ஸ்பெஷலிஸ்டுகளாக பல வக்கீல்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல டெம்பிளேட்டுகளை கைவசம் வைத்துள்ளார்கள். குடும்ப வாழ்வை முறிக்கும் கெடுமதிப் பெண்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி புகார்களை ஜோடித்துக் கொடுப்பார்கள்.
இப்போது இந்த செய்தியை வாசியுங்கள். ஏதோ ஒரு பிரச்னை எப்படி 498A - யாக உருவெடுக்கிறது பாருங்கள்!
------------------------
சென்னையில் பட்டதாரி பெண், கணவர் மீது பரபரப்பு புகார் - 3-வது திருமணம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.6- 2009
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்ஸ்வின் (வயது 26). பட்டதாரி பெண்ணான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கும், கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையைச் சேர்ந்த முகமது அலி மரைக்கான் (34) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் சிங்கப்பூரில் கம்ப்னிட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.
திருமணத்துக்கு பிறகு அவருடன் நானும் சிங்கப்பூர் சென்று வசித்து வந்தேன். சிங்கப்பூர் சென்ற பிறகு எனது கணவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைக்கும் தந்தை என்று தெரிய வந்தது. இதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.
இது பற்றி நான் கேட்ட போது, முதல் மனைவி யாஸ்மினை விவாகரத்து செய்து விட்டதாக எனது கணவர் தெரிவித்தார். இதனால் எனது மனதை தேற்றிக்கொண்டு வேறுவழி இல்லாமல் அவரோடு குடும்பம் நடத்தினேன்.
இந்த நிலையில் எனது கணவர் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார். வரதட்சணையாக பெரிய அளவில் பணம் கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கிடையில் நான் கர்ப்பம் அடைந்தேன். என்னை பார்க்க எனது பெற்றோர் சிங்கப்பூர் வந்தனர். அவர்களிடம் எனது கணவர் என்னை அடித்து உதைத்து, சித்ரவதை செய்வது பற்றியும், ஏற்கனவே அவர் திருமணமானவர் என்பது பற்றியும் சொல்லி கதறி அழுதேன். இதைக் கேட்டு எனது பெற்றோர் கொதித்துப்போனார்கள்.
என்னை அழைத்துக்கொண்டு சென்னை வந்து விட்டனர். இங்கு வந்தவுடன் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.
இதற்கிடையில் எனது கணவரின் தாயார் மதீனா பேகமும், தங்கை சபீயாவும், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் பரங்கிபேட்டை வந்துள்ளனர். அவர்கள் எனது கணவருக்கு 3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்துள்ளதாக அறிகிறேன். சென்னை மடிப்பாக்கத்தில் 3-வது பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், சென்னை அண்ணாசாலை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணி, வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்ததாக புகார் கூறப்பட்ட மதீனாபேகம், சபீயா ஆகிய இருவரையும் பெண் போலீஸ் தனிப்படையினர் நேற்று காலையில் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள முகமது அலி மரைக்கான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.
பெண்ணியத்தின் முழு வெற்றி
”பெற்றோருக்காக தாய்மாமனை கைபிடித்தார்; காதலுக்காக காதலனிடம் கழுத்தை நீட்டினார்”
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சிப் பெண் 2 தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவிப்பு!
சென்னை, ஏப்.7- 2009. செய்தி: தினத்தந்தி
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து இளம் பெண் ஒருவர் புரட்சி செய்துள்ளார். இப்போது 2 கணவர்கள் கட்டிய தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவித்தபடி உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா (வயது 26). இவரது தந்தை அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவரோடு கீதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.
இந்த நிலையில், பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனுக்கு கீதாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தாய்மாமனை மணக்க கீதா சம்மதிக்கவில்லை. உடனே கீதாவின் தந்தை திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் காதலை மறைத்துவிட்டு, தாய்மாமனை மணக்க கீதா சம்மதித்தார்.
கடந்த மாதம் 29-ந் தேதி அன்று கீதாவுக்கு தாய்மாமன் தாலி கட்டினார். திருமணம் முடிந்தவுடன் பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனோடு கீதா 5 நாட்கள் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா திடீரென்று காணாமல் போய்விட்டார். தியாகராயநகருக்கு ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சென்ற அவர் மாயமாகிவிட்டார்.
இதுபற்றி கீதாவின் தாய்மாமன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கீதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அசோக்நகர் போலீசாரும் கீதாவை தேடினார்கள்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கழுத்தில் மாலையுடன் தனது காதலனோடு கீதா திடீரென்று அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய்மாமனை பிடிக்கவில்லை என்றும், எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்றுவிட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவரது கழுத்தில் காதலன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியாக தொங்கியது.
இந்த தகவல் தெரிந்து கீதாவின் பெற்றோரும், முதல் கணவரான தாய்மாமனும் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். `என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள்' என்று தாய்மாமனிடம் கீதா கெஞ்சினார்.
ஆனால், கீதாவை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் பிடிவாதமாக கூறினார். திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரவேண்டும். சட்டையை மாற்றுவதுபோல மனைவிகளை மாற்றும் பண்பாட்டில் நான் பிறக்கவில்லை. கீதாவோடு வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று தாய்மாமன் கூறிவிட்டார்.
இந்த நிலையில், கீதாவின் காதலனும் கீதாவை விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இந்த விசித்திர வழக்கை அசோக்நகர் உதவி கமிஷனர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகாந்தா ஆகியோர் விசாரித்தார்கள். முதலில் தாலி கட்டிய தாய்மாமனுடன் அனுப்புவதா? அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா? என்பது புரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில், போலீசாரை மேலும் குழப்பும் வகையில் புதிய விவகாரம் ஒன்று வந்தது. கீதாவின் காதலனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். நிச்சயம் செய்த பெண் வீட்டாரும் தகவல் தெரிந்து அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள். அவர்கள் கீதாவின் காதலனுக்கு உரிமை கொண்டாடினார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்களும் பிடிவாதம் பிடித்தனர்.
புதிய விவகாரம் போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. இந்த புதிய புயல் கீதாவை நிலைகுலைய வைத்தது. ஒருபக்கம் தாய்மாமன், இன்னொரு பக்கம் காதல் கணவன், காதல் கணவனுக்கோ நிச்சயிக்கப்பட்ட பெண் உரிமை கொண்டாடும் நிலை இப்படி முக்கோண குழப்பத்தில் கீதா திணறினார். நேற்று முன்தினம் இந்த பிரச்சினை பற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடந்தது.
இறுதியில் போலீசார் அனைவரிடமும் கவுன்சிலிங் மூலம் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். தற்சமயம் கீதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்றும், 2 தாலிகளையும் அவரிடம் கொடுத்துவிடுவது என்றும், ஒரு வாரம் நிதானமாக யோசித்து, யாருடன் வாழ்வது என்பதை கீதா முடிவு செய்யட்டும் என்றும் போலீசார் ஒரு தீர்வை சொன்னார்கள்.
இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். கீதா அவரது பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், கீதாவின் காதலனை தனியாக அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அந்த பெண்ணுக்கும் வாழ்வு கிடைக்கும், கீதாவும் அவரது தாய்மாமனோடு சந்தோஷமாக வாழ்வார். எனவே, யோசித்து நல்ல முடிவை எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். காதலனும் ஒரு வாரத்தில் யோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்படி கீதாவின் திருமண வாழ்க்கை எந்த கணவரோடு என்பதை விரைவில் காலம் முடிவு செய்யும் என்று போலீசார் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
----------------------
நிச்சயம் அந்தத் தாய்மான் மேல் வரதட்சணை கேட்டான் என்று 498A கேசு போடப்பட்டு அவர் உள்ளே தள்ளப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பாவம் அய்யா அந்தப் பரிதாப தாய்மாமன்!
கழுத்துக்கு இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொண்டு தமிழகப் பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று கும்மியடிப்போம்!
பொய் கேசு போடுவது இப்படித்தான்!
சாத்தூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ர வதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாத்தூர் அருகே உள்ள ஜெக நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பொன்னுத்தாயி (வயது 24). இவர் சாத்தூர் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள ஒரு புகார் மனு வில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், மனோகரனுக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற் போது எனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாகஎனது கணவர் மனோகரன், அவரது தந்தை ஆறுமுகச்சாமி, மாமி யார் முத்துலட்சுமி, தம்பி மணிகண்டன் ஆகியோர் ரூ.3 லட்சம் கேட்டு என்னை சித்ரவதை செய்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் மனோகரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குறிச்சொற்கள் advocates, harassment, husbands, misuse, victims, ஆண்பாவம், சட்டம், பொய் வழக்கு, வரதட்சணை
