கோவை : வரதட்சணை கொடுமை வழக்கில், மாஜிஸ்திரேட் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடமதுரை, குருந்தாச்சல் நகர் ரங்கம்மாள் கார்டனைச் சேர்ந்தவர் ஜக்கிரியா (வயது: 30), 2004-ல் ஜமீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கணவர் ஜக்கிரியாவும், குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு ஜமீலாவை துன்புறுத்தியதாக ஜமீலா கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதில், கணவர் ஜக்கிரியா, மாமியார் குளோரி, கணவரின் அக்கா ரோஜா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று ரோஜாவை கைது செய்தனர். ஜே.எம்.எண் மூன்றாம் கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஜா, 15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ரோஜா, மாஜிஸ்திரேட் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
~ செய்தி - தினமலர் ஜூலை 19,2008
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இப்போது ஒரு மாஜிஸ்டிரேட் மனைவியையே தீண்டிவிட்டது இந்த 498a வரதட்சிணைச் சட்டம்!
வரதட்சணை வழக்கில் மாஜிஸ்திரேட் மனைவி கைது
கணவருக்கு 'ஜீவனாம்சம்' ரூ.8 லட்சம் தந்த மனைவி
சென்னையில் நடந்த விவாகரத்து வழக்கில் கோர்ட்டு தீர்ப்புபடி நடவடிக்கை.
விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் நலன்
பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம், மனநிலை பாதிக்கப்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி: தினகரன் 15.07.2008
குறிச்சொற்கள் divorce, குடும்பம், சட்டம், பொய் வழக்கு, விவாகரத்து
மாமியாரையும் கணவனையும் கொன்ற மனைவிக்கு ஆயுள் தணடனை
செய்தி: தினமலர் - ஜூலை 15,2008
திருவள்ளூர் : மாமியாரையும், கணவனையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவிமற்றும் கள்ளக்காதலனுக்கு விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணை அசிசி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்நாதன் (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மேரி சேவியர் (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அருள்நாதனுடன் அவரது தாய் சவரியம்மாள் (80) வசித்து வந்தார். அவர்களது சொந்த கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்த அருள் நாதனின் அண்ணன் மகன் டேவிட் ஆரோக்கியராஜ் (26) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.
கம்ப்யூட்டர் நிறுவனமொன்றை டேவிட் துவங்கினார். அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஆசிரியை மேரி சேவியர் சென்று வந்தார். அப்போது, அவர்களுக்குள் கள்ள உறவு ஏற்பட்டது. இதை அறிந்த அருள் நாதனின் தாய் அவர்களை கண்டித்தார். தனது மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார். அருள்நாதனும் மனைவியையும், டேவிட்டையும் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மனைவியும், டேவிட்டும் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இந்நிலையில், 2006ம் ஆண்டு மே 26ம் தேதி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சவரியம்மாள் இறந்ததாக கூறி, பிணத்தை அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டி நாயக்கன்பள்ளிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகு அடுத்த மாதம் 16ம் தேதி அதிகாலை அருள்நாதன் காயங்களுடன் இறந்தார்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக மேரி கூறினார். ஆனால், போலீசார் விசாரணையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், மேரியும், டேவிட்டும் சேர்ந்து தான் அருள்நாதனை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அருள் நாதனின் சகோதரர் ராயப்பன் என்பவர் போலீசில் தனது தாய் சவரியம்மாள் சாவில் மர்மம் உள்ளதாகவும் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.
இதை அடுத்து போலீசார் சவரியம்மாள் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பிணத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிணத்தின் தலையில் ஆழமான காயம் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து மீண்டும் மேரி மற்றும் டேவிட் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் திட்டமிட்டு சவரியம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். டேவிட்டின் சித்தி தான் மேரி சேவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து மாமியார் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கு நீதிபதி சேகர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் மேரி சேவியர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் மற்றும் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அரசு தரப்பு வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதாடினார்
புனிதமா, புதுமையா?
பெண்கள் மென்மையானவர்கள், பேணிக் காக்கப்பட வேண்டியவர்கள். ஆம், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற பின் உங்கள் மனத்தில் தோன்றப்போகும் எண்ணங்கள் இவையே!
- கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் உடல் தோண்டியெடுப்பு
ஜூலை 11,2008 - கணவனைக் கொன்றார் மனைவி - கடலில் போட்டார் கள்ளக் காதலன்!
சிவகாசி:கள்ளக்காதல் தகராறில் காதலனோடு சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.திருத்தங்கல் கே.வி.கே., சாமி காலனியை சேர்ந்த அச்சுத்தொழிலாளி பாண்டி(35). இவரது மனைவி அழகு மீனா (32). மாடு மேய்க்க செல்லும் போது இவருக்கும், திருத்தங்கல் ராஜாங்கத் திற்கும்(37) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
ராஜாங்கம், அழகு மீனாவிற்கு மொபைல்போன் வாங்கி கொடுத்தார். இது பாண்டிக்கு தெரிந்து,மனைவியை கண்டித்தார். மொபைல் போனை ராஜாங்கத்திடம் கொடுத்த அழகுமீனா, கணவர் கண்டிப்பதாக புலம்பினார்.ஆத்திரம் அடைந்த ராஜாங்கம், தனது நண்பர் செல்வம் (25) மூலம் பாண்டியை ஏப்ரல் 8ம்தேதி திருத்தங்கலில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து வந்தார். அங்கு ராஜாங்கத்திற்கும், பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த அழகுமீனா அவர்களை விலக்கிவிட்டார். கணவரை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு பின்னால் வருவதாக கூறினார். நெடுநேரம் ஆகியும் மனைவி வரவில்லை. சந்தேகமடைந்த பாண்டி, மனைவியை தேடி சென்ற போது அழகுமீனாவும், ராஜாங்கமும் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை பார்த்தார். இதை கண்டித்த பாண்டிக்கும், ராஜாங்கத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கோபமடைந்த ராஜாங்கம், மண்வெட்டியால் பாண்டியின் பின் தலையில்தாக்கினார். அழகு மீனாவும்,செல்வமும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் பாண்டி இறந்தார். கொலை செய் யப்பட்ட பாண்டியின் உடலை திருத்தங்கல்-விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டு மூவரும் சென்றனர். அந்த வழியாக வந்த ரயில், ஏறியதில் பாண்டியின் உடல் துண்டானது. விருதுநகர் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாதவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, பாண்டியின் உடலை ஏப்ரல் 9ம் தேதி சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் புதைத்தனர்.
கணவரை கொலை செய்த மனைவி ஏதுவும் தெரியாததுபோல் நடமாடி வந்தார். பாண்டி யின் தாய் காளியம்மாள், தனது மகனை காணவில்லை என ஜூன் 16ல் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அழகுமீனாவிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் தொடர்பில் பாண்டி கொலை செய்யப்பட்ட உண்மை வெளி யானது. இவ்வழக்கில் கள்ளக்காதலன் ராஜாங்கம் மற்றும் செல்வம், அழகுமீனா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் பாண்டியின் உடலை, "சூப்பர் இம்போஸ், டி.என்.ஏ.' சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
நேற்று சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் தாசில்தார் ராமசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாண்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை தடய அறிவியல் ஆய்வக துறை உதவி பேராசிரியர்நடராஜன் தலைமையில்ஏழு பேர் கொண்ட குழுவினர் உடலை பரிசோதனைசெய்தனர்.பாண்டியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், உடன் அழைத்து வந்திருந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயதே ஆன பேத்தியை(பாண்டியின் மகள்) எப்படி காப்பாற்ற போகிறேன் என புலம்பினார்.(நன்றி: தினமலர்)
- ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கள்ளகாதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீட்டில் புதைத்தார் மனைவி. அந்த உடல் பாகங்களை தினசரி கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது கடலில் போட்டு வந்துள்ளார் அவரது கள்ளக் காதலன்.ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி களஞ்சிய ராணி (28). இவர்களுக்கு திருமணாகி ஒரு மகன் உள்ளான்.அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (28). இவர் மீனவர். இவருடன் களஞ்சிய ராணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது கணவர் களஞ்சிய ராணியை கடுமையாக கண்டித்தார்.ஆனால் களஞ்சிய ராணி அவரது பேச்சுக்கு கட்டுப்பட மறுத்து தனது கள்ள காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.இதையடுத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டால் வேலுவுடன் தொடர்ந்து உல்லாசமாக வாழலாம் என நினைத்த களஞ்சிய ராணி, சரவணனை கொலை செய்து துண்டு துண்டாக வீட்டில் புதைத்து வைத்தார்.அந்த உடல் பாகங்களை, வேலு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்துள்ளார்.இந்த நிலையில், தனது கணவனை காணவில்லை என்று களஞ்சிய ராணியே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.களஞ்சிய ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கள்ளகாதலன் வேலுவுடன் இணைந்து கொலை செய்து கடலில் வீசியதை களஞ்சிய ராணி ஒப்புக்கொண்டார்.அதன் பேரில் களஞ்சிய ராணியை போலீசார் கைது செய்தனர்.ஆனால் வேலு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- (நன்றி. தட்ஸ்தமிழ்)
இரு உயிர்களைப் பலி வாங்கிய பொய் வரதட்சிணைப் புகார்
பொய்யான வரதட்சணை புகார்: திருப்பத்தூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
~ செய்தி: தினத்தந்தி - திருப்பத்தூர் (வேலூர்) , ஜுலை.11- 2008
திருப்பத்தூர் அருகே பொய்யான வரதட்சணை புகாரால் அவமானம் அடைந்த பெண், தனது மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி அண்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (30). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 6-ந் தேதி குடிபோதையில் பழனி வரதட்சணை கேட்டு மனைவி கீதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கீதா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் கீதாவின் கணவர் பழனி, மாமனார் தவமணி (55), மாமியார் அமுதா (46), பழனியின் அக்காள் உமாமகேஸ்வரி (31), அம்மு ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் பழனி, தவமணி, அமுதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தாய், சேய் தற்கொலை
உமாமகேஸ்வரி, தன் மீது வரதட்சணை புகார் கொடுத்தது குறித்து மனவேதனை அடைந்தார். மேலும் கணவர் இறந்து விட்டதால் தனது மகன்கள் ஹேமநாத் (15), அமர்நாத் (12) ஆகியோரின் நிலை குறித்து கவலையடைந்த உமாமகேஸ்வரி, வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார். அதன்படி தனது இளைய மகன் அமர்நாத்தை சேலையில் தூக்கில் தொங்கவிட்டார். சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக செத்தான். பின்னர் தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "தனது சாவுக்கு காரணம் நாத்தனார் கீதா தான் என்றும், மூத்த மகன் ஹேமநாத்தை தம்பி பழனிதான் காப்பாற்ற வேண்டும்'' என்றும் எழுதப்பட்டு இருந்தது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், தாய்- மகன் உடலை எடுத்துச் செல்லும் படி உறவினர்களிடம் போலீசார் கூறினர். அதற்கு, இறந்தவருக்கு கணவன் கிடையாது, தாய், தந்தை, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்து விட்டனர். எனவே உடலை வாங்கிச் செல்ல மாட்டோம் என்றும், உமா மகேஸ்வரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கீதாவை கைது செய்ய வேண்டும், கீதா கொடுத்த பொய்யான வரதட்சணை புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எம்.எல்.ஏ., போலீசார் சமரசம்
அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த சூரியகுமார் எம்.எல்.ஏ., ஒன்றிய குழுத் தலைவர் ராஜமாணிக்கம், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குலோத்துங்கன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மனோகரன், சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூஞ்சோலை, பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீதா கொடுத்த வரதட்சணை கொடுமை வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலாவை, வேலூர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி விட்டோம் என்றும், கீதாவை உடனடியாக கைது செய்கிறோம் என்றும், உமாமகேஸ்வரியின் தகப்பனார் தவமணி, தாயார் அமுதா, தம்பி பழனி ஆகிய 3 பேரையும் நிபந்தனை ஜாமினீல் விடுதலை செய்வதாகவும் போலீசார் கூறினார்கள். பின்னர் அவர்கள் உமாமகேஸ்வரி, அவரது மகன் அமர்நாத் ஆகியோரது உடலை பெற்றுச் சென்றனர். மேற்கண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
--------------------
இப்போது சொல்லுங்கள், இந்த 498a சட்டம் பெண்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்கிறதா, பெருங்கேடு விளைவிக்கிறதா என்று!
குறிச்சொற்கள் 498a, harassment, misuse, ஆண்பாவம், கொடுமை, பொய் வழக்கு, வரதட்சணை
மனைவி எனும் முதலையிலிருந்து விடுபட்ட பிரசாந்த்
திருமணம் என்னும் புதை குழியில் விழுந்து, ஒரு கொடுமையான மனைவியால் அலைக்கழிக்கப்பட்ட நடிகர் பிரசாந்த், திரைப்படங்களில் மரங்களைச் சுற்றி வலம் வர வேண்டியவர் கோர்ட்டுகளைச் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை எற்பட்டது நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே மணமான அந்தப் பெண் 498a போன்ற ஆண் எதிரிச் சட்டங்களைத் துணை கொண்டு பணம் பிடுங்க முயற்சி செய்த சோகக் கதையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ஒரு திரைப் படமாக எடுக்க இருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
பிரசாந்தின் மனைவி போட்ட பொய் கேசுகளிலிருந்து அவரை விடுவிக்க 50 கோடி ரூபாய் வரை கேட்டார்களாம்! இதுபோல் பணம் பிடுங்கும் சட்டமாக கெடுமதி கொண்ட பெண்களால் மாற்றப்பட்ட இ.பி.கோ 498a பிரிவு இன்னும் எத்துணை ஆண்களைப் பலி வாங்கப் போகிறதோ!
குறிச்சொற்கள் 498a, harassment, misuse, ஆண்பாவம், கொடுமை, பொய் வழக்கு