புனிதமா, புதுமையா?

பெண்கள் மென்மையானவர்கள், பேணிக் காக்கப்பட வேண்டியவர்கள். ஆம், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற பின் உங்கள் மனத்தில் தோன்றப்போகும் எண்ணங்கள் இவையே!

  1. கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் உடல் தோண்டியெடுப்பு
    ஜூலை 11,2008

  2. சிவகாசி:கள்ளக்காதல் தகராறில் காதலனோடு சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.திருத்தங்கல் கே.வி.கே., சாமி காலனியை சேர்ந்த அச்சுத்தொழிலாளி பாண்டி(35). இவரது மனைவி அழகு மீனா (32). மாடு மேய்க்க செல்லும் போது இவருக்கும், திருத்தங்கல் ராஜாங்கத் திற்கும்(37) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    ராஜாங்கம், அழகு மீனாவிற்கு மொபைல்போன் வாங்கி கொடுத்தார். இது பாண்டிக்கு தெரிந்து,மனைவியை கண்டித்தார். மொபைல் போனை ராஜாங்கத்திடம் கொடுத்த அழகுமீனா, கணவர் கண்டிப்பதாக புலம்பினார்.ஆத்திரம் அடைந்த ராஜாங்கம், தனது நண்பர் செல்வம் (25) மூலம் பாண்டியை ஏப்ரல் 8ம்தேதி திருத்தங்கலில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து வந்தார். அங்கு ராஜாங்கத்திற்கும், பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
    அப்போது அங்கு வந்த அழகுமீனா அவர்களை விலக்கிவிட்டார். கணவரை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு பின்னால் வருவதாக கூறினார். நெடுநேரம் ஆகியும் மனைவி வரவில்லை. சந்தேகமடைந்த பாண்டி, மனைவியை தேடி சென்ற போது அழகுமீனாவும், ராஜாங்கமும் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை பார்த்தார். இதை கண்டித்த பாண்டிக்கும், ராஜாங்கத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    கோபமடைந்த ராஜாங்கம், மண்வெட்டியால் பாண்டியின் பின் தலையில்தாக்கினார். அழகு மீனாவும்,செல்வமும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் பாண்டி இறந்தார். கொலை செய் யப்பட்ட பாண்டியின் உடலை திருத்தங்கல்-விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டு மூவரும் சென்றனர். அந்த வழியாக வந்த ரயில், ஏறியதில் பாண்டியின் உடல் துண்டானது. விருதுநகர் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாதவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, பாண்டியின் உடலை ஏப்ரல் 9ம் தேதி சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் புதைத்தனர்.
    கணவரை கொலை செய்த மனைவி ஏதுவும் தெரியாததுபோல் நடமாடி வந்தார். பாண்டி யின் தாய் காளியம்மாள், தனது மகனை காணவில்லை என ஜூன் 16ல் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அழகுமீனாவிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் தொடர்பில் பாண்டி கொலை செய்யப்பட்ட உண்மை வெளி யானது. இவ்வழக்கில் கள்ளக்காதலன் ராஜாங்கம் மற்றும் செல்வம், அழகுமீனா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் பாண்டியின் உடலை, "சூப்பர் இம்போஸ், டி.என்.ஏ.' சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
    நேற்று சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் தாசில்தார் ராமசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாண்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை தடய அறிவியல் ஆய்வக துறை உதவி பேராசிரியர்நடராஜன் தலைமையில்ஏழு பேர் கொண்ட குழுவினர் உடலை பரிசோதனைசெய்தனர்.பாண்டியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், உடன் அழைத்து வந்திருந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயதே ஆன பேத்தியை(பாண்டியின் மகள்) எப்படி காப்பாற்ற போகிறேன் என புலம்பினார்.

    (நன்றி: தினமலர்)

  3. கணவனைக் கொன்றார் மனைவி - கடலில் போட்டார் கள்ளக் காதலன்!
    ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கள்ளகாதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீட்டில் புதைத்தார் மனைவி. அந்த உடல் பாகங்களை தினசரி கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது கடலில் போட்டு வந்துள்ளார் அவரது கள்ளக் காதலன்.ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி களஞ்சிய ராணி (28). இவர்களுக்கு திருமணாகி ஒரு மகன் உள்ளான்.அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (28). இவர் மீனவர். இவருடன் களஞ்சிய ராணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது கணவர் களஞ்சிய ராணியை கடுமையாக கண்டித்தார்.ஆனால் களஞ்சிய ராணி அவரது பேச்சுக்கு கட்டுப்பட மறுத்து தனது கள்ள காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.இதையடுத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டால் வேலுவுடன் தொடர்ந்து உல்லாசமாக வாழலாம் என நினைத்த களஞ்சிய ராணி, சரவணனை கொலை செய்து துண்டு துண்டாக வீட்டில் புதைத்து வைத்தார்.அந்த உடல் பாகங்களை, வேலு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்துள்ளார்.இந்த நிலையில், தனது கணவனை காணவில்லை என்று களஞ்சிய ராணியே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.களஞ்சிய ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கள்ளகாதலன் வேலுவுடன் இணைந்து கொலை செய்து கடலில் வீசியதை களஞ்சிய ராணி ஒப்புக்கொண்டார்.அதன் பேரில் களஞ்சிய ராணியை போலீசார் கைது செய்தனர்.ஆனால் வேலு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    (நன்றி. தட்ஸ்தமிழ்)

இரு உயிர்களைப் பலி வாங்கிய பொய் வரதட்சிணைப் புகார்

பொய்யான வரதட்சணை புகார்: திருப்பத்தூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

~ செய்தி: தினத்தந்தி - திருப்பத்தூர் (வேலூர்) , ஜுலை.11- 2008


திருப்பத்தூர் அருகே பொய்யான வரதட்சணை புகாரால் அவமானம் அடைந்த பெண், தனது மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி அண்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (30). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 6-ந் தேதி குடிபோதையில் பழனி வரதட்சணை கேட்டு மனைவி கீதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கீதா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் கீதாவின் கணவர் பழனி, மாமனார் தவமணி (55), மாமியார் அமுதா (46), பழனியின் அக்காள் உமாமகேஸ்வரி (31), அம்மு ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் பழனி, தவமணி, அமுதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தாய், சேய் தற்கொலை

உமாமகேஸ்வரி, தன் மீது வரதட்சணை புகார் கொடுத்தது குறித்து மனவேதனை அடைந்தார். மேலும் கணவர் இறந்து விட்டதால் தனது மகன்கள் ஹேமநாத் (15), அமர்நாத் (12) ஆகியோரின் நிலை குறித்து கவலையடைந்த உமாமகேஸ்வரி, வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார். அதன்படி தனது இளைய மகன் அமர்நாத்தை சேலையில் தூக்கில் தொங்கவிட்டார். சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக செத்தான். பின்னர் தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "தனது சாவுக்கு காரணம் நாத்தனார் கீதா தான் என்றும், மூத்த மகன் ஹேமநாத்தை தம்பி பழனிதான் காப்பாற்ற வேண்டும்'' என்றும் எழுதப்பட்டு இருந்தது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், தாய்- மகன் உடலை எடுத்துச் செல்லும் படி உறவினர்களிடம் போலீசார் கூறினர். அதற்கு, இறந்தவருக்கு கணவன் கிடையாது, தாய், தந்தை, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்து விட்டனர். எனவே உடலை வாங்கிச் செல்ல மாட்டோம் என்றும், உமா மகேஸ்வரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கீதாவை கைது செய்ய வேண்டும், கீதா கொடுத்த பொய்யான வரதட்சணை புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எம்.எல்.ஏ., போலீசார் சமரசம்

அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த சூரியகுமார் எம்.எல்.ஏ., ஒன்றிய குழுத் தலைவர் ராஜமாணிக்கம், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குலோத்துங்கன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மனோகரன், சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூஞ்சோலை, பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கீதா கொடுத்த வரதட்சணை கொடுமை வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலாவை, வேலூர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி விட்டோம் என்றும், கீதாவை உடனடியாக கைது செய்கிறோம் என்றும், உமாமகேஸ்வரியின் தகப்பனார் தவமணி, தாயார் அமுதா, தம்பி பழனி ஆகிய 3 பேரையும் நிபந்தனை ஜாமினீல் விடுதலை செய்வதாகவும் போலீசார் கூறினார்கள். பின்னர் அவர்கள் உமாமகேஸ்வரி, அவரது மகன் அமர்நாத் ஆகியோரது உடலை பெற்றுச் சென்றனர். மேற்கண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

--------------------

இப்போது சொல்லுங்கள், இந்த 498a சட்டம் பெண்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்கிறதா, பெருங்கேடு விளைவிக்கிறதா என்று!

மனைவி எனும் முதலையிலிருந்து விடுபட்ட பிரசாந்த்

திருமணம் என்னும் புதை குழியில் விழுந்து, ஒரு கொடுமையான மனைவியால் அலைக்கழிக்கப்பட்ட நடிகர் பிரசாந்த், திரைப்படங்களில் மரங்களைச் சுற்றி வலம் வர வேண்டியவர் கோர்ட்டுகளைச் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை எற்பட்டது நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே மணமான அந்தப் பெண் 498a போன்ற ஆண் எதிரிச் சட்டங்களைத் துணை கொண்டு பணம் பிடுங்க முயற்சி செய்த சோகக் கதையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ஒரு திரைப் படமாக எடுக்க இருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பிரசாந்தின் மனைவி போட்ட பொய் கேசுகளிலிருந்து அவரை விடுவிக்க 50 கோடி ரூபாய் வரை கேட்டார்களாம்! இதுபோல் பணம் பிடுங்கும் சட்டமாக கெடுமதி கொண்ட பெண்களால் மாற்றப்பட்ட இ.பி.கோ 498a பிரிவு இன்னும் எத்துணை ஆண்களைப் பலி வாங்கப் போகிறதோ!

பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை பெண் போலீசார்
துன்புறுத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணைக்காக அழைத்து வருபவர்களை பெண் போலீஸ்
நிலையத்தில் துன்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடித்ததாக புகார்

முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி ரோசையா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து கையே உடைந்து போகும் அளவிற்கு தன்னை பெண் போலீஸ் அதிகாரிகள் அடித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சினை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நியமித்து, விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதி ஆர்.ரகுபதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

கண்டனம்

இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மகளிர் போலீஸ் நிலையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று சில விதிமுறைகளை வகுத்து இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

மகளிர் போலீஸ் நிலையங்கள் சமரச மையமாக செயல்பட
வேண்டும்.

வயதானவர்களையும், கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் அவர்களது வயது, உடல் நலம் வித்தியாசம் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களைத்
தாக்குவதாகவும் புகார்கள் வருகின்றன. தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்த போக்கு மாற வேண்டும். இதன் மூலம் சட்டம் கொண்டு வந்த நோக்கமே பாதிக்கப்பட்டுவிட்டது.

சாதாரண பிரச்சினையை கூட மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரிதாக்கி விடுகிறார்கள்.

புகார் உண்மையானதுதானா என்பதை ஆராயாமலேயே மேல் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். விசாரணை என்ற பெயரில் குடும்பத்தையே துன்புறுத்துகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரை துன்புறுத்தும் நோக்கில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கைது நடவடிக்கைகளும் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இரண்டு நாட்கள் அவர்கள் ஜாமீனில் வரமுடியாது.

கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும். இத்தகைய வழக்குகளை பெண் போலீஸார்தான் திறமையாகக் கையாள்வர் என்று சட்டம் இயற்றுபவர்கள் கருதியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள்
எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேரவதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால், சிறிய சிறிய பிரனைகளுக்குக் கூட பெரிய அளவிலான குற்றம் என்று வர்ணம் பூசப்படுகிறது.

கணவனுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராக குற்றச் சாட்டுக்களைக் கூறுமாறு பெண்கள்ஊக்கப்படுத்தப் படுகின்றனர். இதனால் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்கி, குடும்பத்தினரையும் போலீஸ் நிலையங்களுக்கு இழுக்கின்றனர். இதனால் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே
பாழடிக்கப் படுகிறது.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் சட்ட விதிகள் மீரப்படுவதாக அடிக்கடி குற்றச் சாட்டுக்கள் வருவதால் அரசுக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தெரிவிக்கிறேன்:-

  • வரதட்சணை சாவு, தற்கொலை போன்ற கடுமையான குற்றங்களை தவிர மற்ற புகார்களை வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுத்தான் பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  • வயதானவர்கள், உடம்புக்கு சரியில்லாதவர்கள், மைனர்கள் போன்றோரை பெண் போலீசார் கைது செய்யக்கூடாது.
  • இப்படிப்பட்டவர்களை கைது செய்யவேண்டுமென்றால் போலீஸ்
    சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்து அவர்களது அனுமதி பெற்றுத்தான் கைது செய்யவேண்டும்.
  • ஒருவர் தப்பி ஓடிவிடுவார் என்று இருந்தால் கூட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவை கோர்ட்டில் பெற்றபின் அவரைக் கைது செய்யலாம்.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.
  • விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருபவர்களை பிரம்பால், கையால் தாக்க கூடாது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு சீதன பொருட்களை உடனடியாக பெற்றுத் தந்துவிட வேண்டும்.
  • கோர்ட்டு நடவடிக்கை மற்றும் சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள பெண் போலீசாருக்கு தேவையான பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதற்காக டி.ஜி.பி. தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தனி சீருடை வழங்கலாம். புகார்தாரர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசு இல்லங்களில் தங்க அனுமதிக்கலாம்.


இவ்வாறு நீதிபதி தனது இடைக்கால உத்தரவில்
குறிப்பிட்டிருந்தார்.

செய்தி: தினமலர், தினத்தந்தி


வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

செய்தி: தினத்தந்தி - 5 ஜூலை, 2008

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கை உடைப்பு: பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்க வேண்டும்போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பழகியதால் திருமணம்

சென்னை புதுப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருவையா. இவர் மனைவி நரம்மா. இவர்களுடைய மகன் ரோமையா (வயது 24). இவர் வசிக்கு வீட்டருகே சுப்புலட்சுமி வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் ராதிகா (20).

ராதிகாவுடன் ரோமையா பழகி வருவதால், 2 பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 27.9.07 அன்று 2 பேருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 5 நாட்கள் வேறொரு இடத்தில் 2 பேரும் குடும்பம் நடத்தினர்.

விவாகரத்து வழக்கு

பின்னர் ரோமையா, சென்னை குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். தனக்கு சிலர் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாக வழக்கில் கூறி இருந்தார். இந்த நிலையில் ரோமையா மீது சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ராதிகா வரதட்சணைக் கொடுமை புகார் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரோமையா மனு
தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் 3 வாரங்கள் தொடர்ந்து அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 நாட்கள் தொடர்ந்து ரோமையா கையெழுத்து போட்டு வந்தார்.

லத்தியால் அடி

இந்த நிலையில் ஐகோர்ட்டை மீண்டும் ரோமையா அணுகி, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். ரோமையா தரப்பில் வக்கீல் உதயபானு ஆஜரானார். முன்ஜாமீன் பெற்று 6 நாட்களுக்குள் நிபந்தனையை தளர்த்த முடியாது என்று நீதிபதி கூறினார்
.
நிபந்தனையின் அடிப்படையில் கையெழுத்து போடச் சென்ற போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, ரோமையாவிடம் , ``இன்ஸ்பெக்டர் கட்டி வைத்த பெண்ணை நீ விவாகரத்து செய்யக் கூடாது'' என்று கூறி லத்தியால் அடித்ததாகவும், இதனால் உடைந்து போகும் அளவுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோமையா தரப்பில் கூறப்பட்டது.

கோர்ட்டில் விசாரணை

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நவனீதம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோரை கோர்ட்டுக்கு வரவழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர். போடாமல் விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. எப்.ஐ.ஆர். போடாமல் விசாரணை நடத்துவதை நீதிபதி கண்டித்தார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கும் குறையாத அதிகாரியை போலீஸ் கமிஷனர் நியமித்து, நவனீதம், விஜயகுமாரி ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, 7-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

சட்டம் படுத்தும் பாடு



நன்றி: தினமலர்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மனைவியை பிரிப்பதாக கணவரிடமும், கணவரை சேர்த்து வைப்பதாக மனைவியிடமும் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு


சென்னை, ஜுலை.2-
சென்னையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் பெயர் சதீஷ்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், சியாமளாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் லண்டனில் வேலை பார்க்கிறார். இனிதாக இல்லற வாழ்க்கை நடத்திய இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ்குமார், இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், சியாமளா அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி (வயது 56) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தினமும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.


லஞ்ச புகார்


இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சதீஷ்குமாரிடமும், சியாமளாவிடமும் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சதீஷ்குமாரை சேர்த்து வைப்பதாக சியாமளாவிடமும், சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷ்குமாரிடமும் பணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சியாமளாவிடம் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு, பின்னர் ரூ.10 ஆயிரமாவது தரவேண்டுமென்று ராஜலட்சுமி மிரட்டியுள்ளார்.


இது தொடர்பாக சியாமளா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இயக்குனர் நடராஜன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சூப்பிரண்டு ஆசியம்மாள், துணை சூப்பிரண்டு அலிபாஷா ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ஜோசப், வேதரத்தினம் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்தார்கள்.


கைதானார்


நேற்று சியாமளாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை லஞ்ச புகாரில் 3 இன்ஸ்பெக்டர்களும், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 போலீஸ் ஏட்டுகளும் கைதாகியுள்ளனர்.


~ செய்தி: தினத்தந்தி. படம்: Times of India (02-07-2008)


மனைவி புகார் கொடுத்தால் போதும்; கணவன் கைது செய்யப்படுவான் என்னும் சட்ட நடைமுறை தொடர்ந்து இருக்கும் வரை இதுபோன்ற பல அராஜகங்களை வரும் நாட்களில் எதிர் பார்க்கலாம்.


ஆண்களே, இப்ப்டியும் ஒரு திருமணம் உங்களுக்குத் தேவையா!!